அமீரக செய்திகள்

துபாய்: 2021 ம் ஆண்டின் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஆடம்பர வில்லா..!! விலையை கேட்டால் தலையே சுற்றும்..!!

பிரம்மாண்டத்திற்கும் ஆடம்பரத்திற்கும் உலகளவில் பெயர் போன நகரம் துபாய். பல்வேறு புதுப்புது கட்டிடங்கள், ஆடம்பர நிகழ்ச்சிகள், அனைத்து நிறுவனங்களின் வாகனங்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது துபாய் நகரம். உலகளவில் அதிகளவு சுற்றுலாவாசிகள் பயணிக்கக்கூடிய நகரமான துபாயில் பல்வேறு நவீன கட்டிடங்கள் தொடர்ந்து கட்டப்பட்ட வண்ணமே இருக்கின்றன.

இந்நிலையில் துபாயில் உள்ள பாம் ஜுமேரா (Palm Jumeirah) பகுதியில் உள்ள ஒரு வில்லா 2021 ம் ஆண்டில் துபாயில் விற்கப்பட்ட மிக விலையுர்ந்த சொத்தாகும். இந்த வில்லா 111.25 மில்லியன் திர்ஹமிற்கும் (இந்திய மதிப்பில் சுமார் 221.11 கோடி ரூபாய்) அதிகமான விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன் 100 பாம் (One 100 Palm) என்று அழைக்கப்படும் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த வில்லா மொனாக்கோவைச் சேர்ந்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த குடும்பத்தினரால் வாங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த குடும்பத்தை பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

3-தளங்களாக கட்டப்பட்டிருக்கும் இந்த வில்லா 14,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இது ஐந்து விசாலமான VIP படுக்கையறைகளை வழங்குகிறது. மேலும், இந்த விலாவில் உள்ள மாஸ்டர் ரூம் 1,300 சதுர அடி பரப்பளவைக்கொண்டுள்ளது. கடந்த ஜூன் 2020 ம் ஆண்டில் இந்த வில்லா விற்பனைக்கு வந்துள்ளது.

லூயிஸ் உய்ட்டன் ஹெர்ம்ஸ் (Louis Vuitton & Hermes) எழுதிய பென்ட்லி மினோட்டி பர்னிச்சர் அலங்காரங்கள் (Bentley & Minotti furniture decor), மூன்று உட்புற / வெளிப்புற சினிமா லவுஞ்சுகள், ரூப் டாப்பில் ஒரு பாப்-அப் டிவியுடன் கண்ணாடியிலான ஜக்குஸி (infinity glass Jacuzzi with a pop-up TV) உடன் சேந்த வெளிப்புற சினிமா ஆகியவை வில்லாவின் சிறப்பம்சங்கள் ஆகும்.

மேலும், இந்த வில்லா ஒரு கலைக்கூடமாகவும் செயல்படுகிறது. ரிச்சர்ட் ஆர்லின்ஸ்கி மற்றும் ஈரோ ஆர்னியோ (Richard Orlinsky and Eero Arnio) ஆகியோரின் தனித்துவமான சிற்பங்கள் மற்றும் ஃபிடியா ஃபாலாசெட்டி ஸ்கிராப்ஸ்கல்டெர்ஸ் அமெரிக்காவின் (Fidia Falaschetti & Scrapsculteres USA) ஓவியங்கள் ஆகியவையும் இங்கு காணக்கிடைக்கின்றன என்பதும் இந்த ஆடம்பர வில்லாவின் சிறப்பம்சங்களாகும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!