அமீரக செய்திகள்தமிழக செய்திகள்
துபாயின் பிரம்மாண்ட நூலகத்தில் முதல் தமிழ் புத்தகமாக இடம்பெற்ற ’திப்பு சுல்தான்’ நூல்..!
துபாயில் சமீபத்தில் திறக்கப்பட்ட புத்தக வடிவமைப்பிலான முஹம்மது பின் ராஷித் நூலகம் திறக்கப்பட்டது. இந்த நூலகத்தை துபாய் ஆட்சியாளரும், அமீரக துணை அதிபருமான மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் திறந்து வைத்தார். இங்கு ஆயிரக்கணக்கான நூல்கள் அரபி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் குழந்தைகளுக்கான நூலகமும், அவர்கள் விளையாடும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஏழு மாடிகள் கொண்ட இந்த நூலகம் கட்டிடக் கலையின் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது.
இந்த நூலக அலுவலர் அப்துல் ரஹ்மானிடம் ஊடகவியலாளர் ஹிதாயத், ஈரோடு ஜமால் முஹம்மது எழுதிய ‘திப்பு சுல்தான்’ என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார். இந்த நூலை பெற்றுக் கொண்ட அலுவலர் இதன் மூலம் இந்த நூலகத்திற்கு கிடைத்த முதல் தமிழ் நூல் என்ற பெருமையை பெறுவதாக குறிப்பிட்டார்.