அமீரக செய்திகள்

தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகளை கையாளும் DXB.. பயணிகளின் வசதிக்காக எடுத்துள்ள நடவடிக்கைகள்..!!

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) வழியாக பயணம் செய்கின்றனர். எப்போதும், பயணிகளின் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், 2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக உலகின் பரபரப்பான விமான நிலையமாக துபாய் விமான நிலையம் அதன் நிலையை தக்க வைத்துள்ளது.

தற்போது, இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 21.2 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் துபாய் விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளனர். இவ்வாறு இடைவிடாது பயணிகள் போக்குவரத்து அதிகரித்துக் கொண்டிருக்கும் துபாய் விமான நிலையத்தில் பயணிகளுக்கு வசதியாக பல அமைப்புகளும் சேவைகளும் உள்ளன.

இந்நிலையில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயணங்களை எளிதாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து துபாய் விமான நிலையமானது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பயணிகளுக்கு எளிதான பயணத்தை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனை பின்வருமாறு பார்க்கலாம்.

1. விரைவான செக்-இன் வசதி:

துபாய் சர்வதேச விமான நிலையம் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் குறைக்கவும், விரைவான செக்-இன்களை அனுமதிக்கவும் அதிக கவுன்டர்கள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் பிஸியான நேரங்களில் கூடுதலாக கவுன்டர்கள் செயல்படுத்தப்பட்டும் வருகின்றன.

மேலும், பல விமான நிறுவனங்களுக்கான சிட்டி செக்-இன் சேவைகளும் உள்ளன. இதன் மூலம் பயணத்திற்கு முன்கூட்டியே லக்கேஜ்களை கொடுத்து விட்டு விமான நிலைய செயல்முறையை மிகவும் எளிமையானதாகவும், தொந்தரவு இல்லாததாகவும் மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது.

2. பாதுகாப்பு:

துபாய் விமான நிலையம் வரும் பயணிகளுக்கு ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே பாதுகாப்பு வழங்கப்படுகிறது என விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, DXB இல் உள்ள ஸ்மார்ட் கேட்ஸ் சமீபத்திய பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது முக மற்றும் கருவிழி அங்கீகாரத்தின் மூலம் பயணிகளை பயணிக்க அனுமதிக்கும். இதனால் பயணிகள் தங்களின் முக்கிய ஆவணங்களை வெளியில் எடுக்காமலேயே எளிதில் பயண செயல்முறையை முடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

3. பொழுதுபோக்கு மற்றும் உணவு:

உலகின் மிக பரபரப்பான சர்வதேச விமான நிலையத்தில் 325 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை மற்றும் உணவு விற்பனையகங்கள் உள்ளன. மேலும், இலவச WiFi வசதியும் கிடைக்கிறது. அதுபோல, ஓய்வெடுப்பதற்கான இடங்கள் மற்றும் ஸ்பா வசதிகள் போன்றவை உங்கள் நேரத்தை நிம்மதியாக செலவிட உதவும்.

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம்

துபாய் சர்வதேச விமான நிலையம் மட்டுமல்லாமல் துபாயில் இயங்கி வரும் மற்றொரு விமான நிலையமான அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தை 2050 ஆம் ஆண்டிற்குள் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றவேண்டும் அதாவது வருடத்திற்கு சுமார் 255 மில்லியன் பயணிகள் போக்குவரத்து பதிவாகும் என்ற நோக்கத்துடன் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த விமான நிலையமானது கடந்த 2010 இல் சரக்கு போக்குவரத்தை தொடங்கி, பின்னர் 2013 இல் பயணிகள் விமான சேவைகளை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!