அமீரக செய்திகள்

அமீரகத்தில் வேகமான பாதையில் வாகனம் ஓட்டினால் என்ன தண்டனை தெரியுமா..??

அமீரகத்தில் உள்ள பல வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் செல்லும் போது ‘Fast Lane’ என்று சொல்லக்கூடிய இடதுபுறம் இருக்கக்கூடிய பாதையில் வேகமாக பயணம் செய்து வருவதை பெரும்பாலும் கடைபிடிக்கின்றனர். அதன் அதிகபட்ச வேக வரம்பு 140 கி.மீ ஆகும். இருப்பினும் சாலைகளில் இந்த வேகமான பாதையை பயன்படுத்தும் போது அப்பாதைக்கான முறையான விதிமுறைகளை கடைபிடிக்க தவறும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக 400 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்வது முக்கியமாகும்.

சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் இடது பாதையைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிமுறை பற்றி பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்ள வேண்டிய விதிகளின் பட்டியல் இங்கே:

  • துபாய் காவல்துறையின் கூற்றுப்படி, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல வேகமான பாதையைப் பயன்படுத்தக்கூடாது. இதன் பயன்பாடு அவசர வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே. இந்த விதியை விளக்கும் வகையில் காவல்துறை வெளியிட்டுள்ள வீடியோ இதோ:

  • சாலையின் பின்புறம் அல்லது இடதுபுறம் வரும் வாகனங்களுக்கு வழிவிடத் தவறும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 400 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 4 பிளாக் பாய்ண்ட்ஸ் வழங்கலாம். அபுதாபி காவல்துறை முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோ வழி கொடுக்காததால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்காட்டுகிறது:

  • விரைவு பாதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேகத்தை விட குறைவான வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விரைவு பாதையை பயன்படுத்தக்கூடாது.
  • விரைவு பாதையில் முந்திச் செல்லும் வாகன ஓட்டிகள் டெயில்கேட் செய்ய முடியாது. முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கத் தவறினால் 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
  • துபாயில், டெலிவரி ரைடர்கள் வேகமான பாதையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

Related Articles

Back to top button
error: Content is protected !!