அமீரக செய்திகள்

RTA வழங்கும் eWallet சேவை.. விண்ணப்பிப்பது எப்படி? எந்தெந்த சேவைகளுக்கு பயன்படுத்தலாம்?

துபாயில் வசிக்கும் குடியிருப்பாளரா நீங்கள்? உங்கள் வாகனத்திற்கான பார்க்கிங் கட்டணம் மற்றும் பிற RTA சேவைகளுக்கு கட்டணம் செலுத்த சிரமப்படுகிறீர்களா? உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த நினைத்தால், நீங்கள் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) ஆன்லைன் கணக்கிற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆம், RTA eWallet என்கிற ஆன்லைன் ப்ரீபெய்டு கணக்கு சேவையின் மூலம், பணம் மற்றும் கிரெடிட் கார்டுகளின் தேவையின்றி பல்வேறு RTA சேவைகளுக்கும் ஆன்லைனிலேயே பணப்பரிமாற்றம் செய்யலாம். இது நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தங்கள் eWallet கணக்கில் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ள அனுமதிக்கிறது.

எனவே, நீங்கள் RTA இணையதளமான rta.ae மற்றும் ‘RTA Dubai’ மொபைல் ஆப்ஸ் மூலம் RTAவின் அபராதம், பார்க்கிங் அல்லது வாகனம் அல்லது ஓட்டுநர் உரிமச் சேவைகளுக்கு பணம் செலுத்த உங்கள் eWallet ஐப் பயன்படுத்தி நேரடியாக கட்டணச் செயல்முறையை விரைவாகவும் எளிதாகவும் முடிக்கலாம்.

RTA eWallet க்கு எப்படி விண்ணப்பிப்பது?

  1. RTAவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து இந்த இணைப்பைப் பார்வையிடவும் – https://www.rta.ae/wps/portal/rta/ae/home/rta-services/service-details?serviceId=3704492 மற்றும்  ‘Apply Now’  என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. உங்களின் UAE பாஸ் மூலம் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  3. உங்களின் எமிரேட்ஸ் ஐடி மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, ‘Validate Emirates ID’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் எமிரேட்ஸ் ஐடியின் முன் மற்றும் பின்புறத்தை பதிவேற்றும்படி கேட்கும்.
  4. பின்னர் உங்கள் குடியுரிமை மற்றும் நீங்கள் வசிக்கும் எமிரேட் ஆகியவற்றை உள்ளிட்டு முகவரியை வழங்கவும்.
  5. அதைத் தொடர்ந்து, உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
  6. பின்னர் விவரங்களை உறுதிசெய்து, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு, ‘confirm’ என்பதைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், நீங்கள் குறிப்பு எண்ணைப் பெறுவீர்கள், அது RTA ஆல் அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் கணக்கு எண் மற்றும் PIN நம்பர் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.

eWallet கணக்கை வங்கி கணக்குடன் எவ்வாறு இணைப்பது?

— நீங்கள் PIN நம்பரைப் பெற்றதும், RTA இணையதளத்திற்குச் சென்று உங்களின் UAE பாஸ் மூலம் மீண்டும் உள்நுழையவும். பின்னர் அதில் காட்டப்படும் உள்நுழைவு (Enter) ஐகானைக் கிளிக் செய்யவும். அதன்பிறகு ‘Dashboard’ என்பதைக் கிளிக் செய்து, ‘RTA eWallet’ என்பதை கிளிக் செய்யவும்.

— அடுத்தபடியாக, திரையில் காட்டப்படும் ‘Link eWallet’ விருப்பத்தை கிளிக் செய்து, உங்கள் கணக்கு எண் மற்றும் மின்னஞ்சலில் பெறப்பட்ட PIN நம்பரை உள்ளிடவும். அதன் பிறகு, ‘Link’ என்பதை கிளிக் செய்யவும்.

— செயல்முறை முடிந்ததும் நீங்கள் உங்கள் eWallet கணக்கிற்கு மீண்டும் மாற்றப்படுவீர்கள், அங்கு நீங்கள் eWallet ஐ டாப் அப் செய்வதற்கான விருப்பத்தை கிளிக் செய்து, உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி அதில் தேவையான பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!