அமீரக செய்திகள்

UAE: பகுதியளவு மூடப்படும் அபுதாபியின் முக்கிய பாலம்…!!

அபுதாபியில் உள்ள ஒரு முக்கிய பாலமான அல் மக்தா பிரிட்ஜின் ஒரு பகுதியானது வார இறுதியில் மூடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமானது (ITC) வியாழக்கிழமை, அல் மக்தா பிரிட்ஜின் இரண்டு பாதைகள் நான்கு நாட்களுக்கு மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி அந்த பாலத்தின் இரு திசைகளிலும் உள்ள வலது பாதைகள் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 9, 2022 முதல் செப்டம்பர் 12, 2022 திங்கள் வரை மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்டுமாறும், வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றவும் ITC கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!