அமீரக செய்திகள்

UAE: பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய துபாய் FLY EMIRATES கேபின் பணியாளர்களுக்கு பாராட்டு..!

உலக முதலுதவி தினமான நேற்று, துபாயின் எமிரேட்ஸ் விமானத்தின் கேபின் குழுவினர் இருதய நுரையீரல் சுவாசத்தை (CPR) வழங்குவதன் மூலமும், (Defibrillator) டிஃபிபிரிலேட்டரைப் பயன்படுத்தி இரண்டு பயணிகளின் உயிரை கடந்த ஜூலை மாதம் காப்பாற்றியதாக தெரிவித்துள்ளது. துபாயின் FLY EMIRATES விமான நிறுவனம் தனது கேபின் பணியாளர்களுக்கு முதலுதவியின் அனைத்து அம்சங்களிலும் மருத்துவப் பயிற்சியை வழங்குகிறது.

அதுமட்டுமின்றி மயங்கி விழுந்த பயணியைக் கையாள்வது, மூச்சுத் திணறலை நிர்வகித்தல், ஆஸ்துமா மற்றும் ஹைப்பர்வென்டிலேஷன் போன்ற சுவாசக் சிரமங்களை அடையாளம் கண்டு நிர்வகிப்பது, மார்பு வலி, பக்கவாதம், குறைந்த இரத்த சர்க்கரை, ஒவ்வாமை எதிர்வினைகள், ஆழமான நரம்பு இரத்த உறைவு, பாரோட்ராமா, டிகம்ப்ரஷன் நோய் உள்ளிட்டவற்றை கையாள்வது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரசவிப்பது, புதிதாகப் பிறந்த குழந்தையை கையாள்வது மற்றும் மரணத்தை நிர்வகித்தல் போன்றவைகளும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள எமிரேட்ஸ் கேபின் க்ரூ பயிற்சி மையம், உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதியில், அனைத்து பயிற்சிகளும் சான்றளிக்கப்பட்ட விமான முதலுதவி பயிற்றுனர்களால் வழங்கப்படுகிறது.

உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, எமிரேட்ஸ் 3,000 புதிய கேபின் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்து, விமான முதலுதவி திறன்களுடன் கூடிய விமான சேவையின் கடுமையான கேபின் க்ரூ பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக செய்து வருகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!