அமீரக செய்திகள்

UAE: ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தாமதம்.. அவதிக்குள்ளாகிய பயணிகள்..!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக ஷார்ஜா, குவைத், மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், இலங்கை உள்ளிட நாடுகளுக்கு அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஷார்ஜாவிலிருந்து காலை 10:50 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து சேரும். இந்த விமானம் மீண்டும் மதியம் 12.50 மணிக்கு குவைத் நோக்கி புறப்பட்டு செல்லும்.

அந்த வகையில் காலை 12.50 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்ய இருந்த 158 பயணிகள் 3 மணி நேரம் முன்னதாக அதாவது காலை 9:30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வர துவங்கினர். இந்த நிலையில் ஷார்ஜாவிலிருந்து திருச்சிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வராத காரணத்தினால், பயணிகள் அனைவருக்கும் விமான நிலையம் வயர்லெஸ் சாலையில் உள்ள தங்கும் விடுதி மற்றும் திருச்சி கலையரங்கம் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளிலும் பயணிகள் தங்குவதற்கு விமான நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது அவர்களுக்கு ஷார்ஜாவில் இருந்து வரும் விமானம் தாமதமாக வருவதால் மாலை சுமார் 4 மணியளவில் விமானம் வந்தவுடன் குவைத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர். இந்த நிலையில் மாலை 4 மணி ஆன பிறகும் ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வர வேண்டிய விமானம் ஷார்ஜாவிலிருந்து புறப்படவில்லை என்பதை அறிந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட முனைந்தனர்.

இதனைத் தொடர்ந்து விமான நிறுவனத்தினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் ஷார்ஜாவிலிருந்து நள்ளிரவு ஒரு மணிக்கு திருச்சிக்கு வந்த இறங்கிய மீண்டும் நள்ளிரவு 2.10 மணிக்கு 130 பயணிகளுடன் குவைத் நோக்கி புறப்பட்டு சென்றது. 15 மணி நேரம் மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் பெறும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

இதே போல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளுக்கு முன்கூட்டிய அறிவிப்பில்லாமல் விமான நிலையம் சென்ற பிறகு விமானம் புறப்படுவதில் கால தாமதம் ஏற்படுவது அவ்வப்போது நிகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!