அமீரக செய்திகள்

GCC நாடுகளில் வசிப்பவர்கள் துபாய் வருவதற்கு என்ட்ரி பாஸ் பெறுவது எப்படி..? படிப்படியான விளக்கம் உள்ளே..!!

வளைகுடா நாடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வர விரும்பினால், என்ட்ரி பெர்மிட் பெறுவது அவசியமாகும். துபாய் வருபவர்கள் இதற்காக Dubai’s General Directorate of Residency and Foreigners Affairs (GDRFA) மூலம் ஆன்லைனில் என்ட்ரி பெர்மிட்டுக்கு அப்ளை செய்ய வேண்டும்.

இவ்வாறு மற்ற GCC நாடுகளில் இருந்து அமீரகம் வருவதற்கான பயணத்தை சுமூகமாக்க GDRFA-வில் என்ட்ரி பெர்மிட் விண்ணப்பிப்பதற்கு என்னென்ன விதிமுறைகள், எளிதாக எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

என்ட்ரி பெர்மிட் பெறுவதற்கான தகுதி

1. நீங்கள் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு GCC நாட்டின் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி (resident permit) பெற்றிருக்க வேண்டும்.
2. நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் எந்தத் தடையும் பயணிக்கு இருக்கக்கூடாது.
3. வேலை அல்லது வசிப்பிட அட்டையில் தொழிலைச் சேர்க்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள்:

1. அசல் பாஸ்போர்ட்.
2. GCC நாட்டினால் வழங்கப்பட்ட பெர்மிட்.(நாட்டிற்கு வந்தவுடன் காண்பிக்கப்பட வேண்டும்)
3. சிவில் அல்லது தொழிலாளர் அட்டை.

எப்படி விண்ணப்பிப்பது?

1.https://www.gdrfad.gov.ae/en/services/ee043e4a-5c61-11ea-0320-0050569629e8 என்ற வலைதளத்தில் ‘Entry permit for residents in GCC countries’ என்ற ஆன்லைன் சேவையைப் பார்வையிடவும். பின் அதில் ‘Start service’.’ என்பதைக் கிளிக் செய்யவும்.

2. அதன் பின்னர் log in செய்து உங்கள் ஆன்லைன் கணக்கில் உள்நுழையுமாறு நீங்கள் கேட்கப்படுவீர்கள். அதன் பின் ‘Individuals’ என்பதை கிளிக் செய்து, உங்களிடம் ஏற்கனவே GDRFA கணக்கு இருந்தால், உங்கள் username மற்றும் password ஐ உள்ளிட வேண்டும்.

மேலும், உங்களிடம் UAE PASS இருந்தால் (இது UAE இல் வசிக்காதவர்களுக்கும் கிடைக்கும்) GDRFA இன் ஆன்லைன் சேவைகள் போர்ட்டலில் உள்நுழைய அதைப் பயன்படுத்தலாம்.

உங்களிடம் இந்த இரண்டு கணக்குகளும் இல்லை என்றால், ‘Register now’ என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்து, மின்னஞ்சலில் பதிவு செய்வதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து பின்வரும் விவரங்களை உள்ளிடவும்:

• ஒரு பயனர் பெயரை உருவாக்கவும்
• உங்கள் முதல் மற்றும் கடைசி பெயர்
• மின்னஞ்சல் முகவரி
• பிறந்த தேதி
• கடவுச்சொல்லை அமைத்து, உறுதிப்படுத்த அதை மீண்டும் உள்ளிடவும்.

பின்னர், ‘OTP அனுப்பு (ஒரு முறை கடவுச்சொல்)’ என்பதைத் தட்டி, ‘நான் ரோபோ இல்லை’ என்பதற்கான பெட்டியைத் தேர்வுசெய்க. அடுத்து, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க பெட்டியை சரிபார்த்து, Register என்பதைக் கிளிக் செய்யவும்.

3. உங்கள் தனிப்பட்ட விவரங்களை வழங்குவதன் மூலம் ஒரு படிவத்தை நிரப்பும்படி கேட்கப்படுவீர்கள்.
4. அடுத்து, மேலே குறிப்பிட்டுள்ளபடி, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றும்படி கேட்கப்படுவீர்கள்.
5. அதன் பின் உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்தவும்.
6. இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

கட்டணம்

என்ட்ரி பெர்மிட் பெறுவதற்கு கட்டணமாக 250 திர்ஹம்ஸ் மற்றும் VAT எனும் வரியும் (5%) செலுத்த வேண்டியிருக்கும். GDRFA தெரிவித்துள்ளதன் படி, உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், 48 மணிநேரத்திற்குள் நுழைவு அனுமதியைப் பெறுவீர்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!