அமீரக செய்திகள்

1 லட்சம் திர்ஹம்ஸ் பரிசை வென்ற இரு இந்தியர்களை தேடும் பிக் டிக்கெட் குழு.. பொதுமக்களிடம் வேண்டுகோள்..!!

அபுதாபியின் பிக் டிக்கெட் டிராவில் வெற்றி பெற்ற இரண்டு வெற்றியாளர்கள் அவர்களின் ரொக்கப் பரிசுகளை இன்னும் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதால், அவர்களைக் கண்டறிய உதவுமாறு பிக் டிக்கெட் குழு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிக் டிக்கெட் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த ஜூலை 1 ஆம் தேதியன்று நடந்த ஜூன் மாத நான்காவது வாராந்திர இ-டிராவில் 279888 என்ற டிக்கெட் எண்ணுடன் அஜித்குமார் என்பவரும், 262224 டிக்கெட் எண்ணுடன் முகமது ஹனிஃப் என்பவரும் 100,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசை வென்றுள்ளனர்.

ஆனால், பிக் டிக்கெட் குழுவினால் இரண்டு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களையும் தொடர்பு கொண்டு அவர்களின் வெற்றியைத் தெரிவிக்க முடியவில்லை. பெரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவர்களைத் தொடர்பு கொள்வதில் தோல்வியுற்றதாக ரேஃபிள் டிராவில் உள்ள குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வெற்றியாளர்கள் இருவரும் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அதே இ-டிராவில் பங்கேற்று மூன்றாவது வெற்றியாளரான குராத் உல் அய்ன் என்ற பாக்கிஸ்தானிய பெண் ஒருவர் 100,000 திர்ஹம்களை வென்றுள்ளார். மேலும் இதில் வெற்றி பெற்ற மற்ற 20 வெற்றியாளர்கள் தலா 10,000 திர்ஹம் ரொக்கப் பரிசை வென்றுள்ளனர்.

கடந்த ஈத் அல் அதா பண்டிகையன்று, ‘2 டிக்கெட்டுகளை வாங்கினால் 2 இலவசம்’ என்று ப்ரோமோஷன் செய்யப்பட்ட போது, தனது வெற்றிக்கான டிக்கெட்டை வாங்கியதாக கூறும் குராத், அவர் இலவசமாகப் பெற்ற டிக்கெட்டுகளில் ஒன்றே அவரை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த மாதமும் ரேஃபிள் டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் வாராந்திர இ-டிராக்களில் தானாக நுழைந்து, தலா 100,000 திர்ஹம்களுடன் வெளியேறும் நான்கு வெற்றியாளர்களில் ஒருவராக இருப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் 3 அன்று நடக்கவிருக்கும் இறுதி டிராவில், 15 மில்லியன் திர்ஹம் அல்லது மற்ற ஒன்பது ரொக்கப் பரிசுகளில் ஒன்றை வெல்வதற்கான வாய்ப்பையும் ஒரே டிக்கெட்டில் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்களும் டிராவில் பங்கேற்க விரும்பினால், பிக் டிக்கெட்டின் இணையதளம் அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கடைகளில் உள்ள கவுண்டர்களுக்குச் சென்று ஜூலை 31 ஆம் தேதி வரை அடுத்த டிராவிற்கான டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!