அமீரக செய்திகள்

துபாய்: பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி அளிக்கும் மூன்று நாள் சிறப்பு விற்பனை.. எப்போது முதல்..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் (Dubai Shopping Festival) அதன் ப்ரொமோஷன்களை வெளியிட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி, அதன் 28வது பதிப்பின் கடைசி விற்பனையை அறிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனையானது நகரம் முழுவதும் 2,000 க்கும் மேற்பட்ட கடைகளில் 500 க்கும் மேற்பட்ட பிராண்டுகளுடன் எதிர்வரும் 27 முதல் 29 வரை நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குழந்தைகளுக்கான அழகிய உடைகள், நாகரீக பொருட்கள் முதல் ஸ்டைலான வாழ்க்கை முறையில் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் மற்றும் பல பொருட்களுக்கு 25 முதல் 90 சதவீதம் வரையிலான சலுகைகளை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க இது இறுதி வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு விற்பனையில் இடம்பெறும் முக்கிய பிராண்டுகளின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் ஸ்டெல்லா மெக்கார்ட்னி (Stella McCartney), கென்சோ (Kenzo), மைக்கேல் கோர்ஸ் (Micheal Kors), டோரி புர்ச் (Tory Burch), ரால்ப் லாரன் (Ralph Lauren), மைசன் மார்கீலா (Maison Margiela), டெட் பேக்கர் (Ted Baker), பால்மெயின் (Balmain), லாகோஸ்ட் (Lacoste), டீசல் (Diesel) போன்ற பிராண்டுகளும் மேலும் பல பிராண்டுகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button
error: Content is protected !!