அமீரக செய்திகள்

அமீரகத்தில் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை.. பிப்ரவரி மாத விலைப்பட்டியல் வெளியீடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. இந்த மாதம் எரிபொருள் விலையானது முன்னர் இருந்த விலையை விட குறைக்கப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி மாத எரிபொருள் விலையானது அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் குழுவின் பிப்ரவரி மாத விலைப்பட்டியலின் படி, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.05 திர்ஹம்சாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை ஜனவரி மாதத்தில் 2.78 திர்ஹம்சாக இருந்தது.

அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 2.93 திர்ஹம்சாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை ஜனவரி மாதம் 2.67 திர்ஹம்சாக இருந்தது.

மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 2.86 திர்ஹம்சாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2.59 திர்ஹம்சாக ஜனவரி மாதத்தில் இருந்தது.

அதே சமயம் ஜனவரி மாதத்தில் ஒரு லிட்டருக்கு 3.29 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது பிப்ரவரி மாத விலை பட்டியலில் 3.38 திர்ஹம்சாக சற்று உயர்த்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!