அமீரக செய்திகள்

புதிய டிரைவிங் லைசென்ஸ் மற்றும் புதுப்பித்தலுக்கான 100 திர்ஹம்ஸ் கண் பரிசோதனை… கூடுதல் ஆப்டிக் சென்டர்களுக்கு ஒப்புதல்..!!

அஜ்மானில் புதிய ட்ரைவிங் லைசன்ஸ்களைப் பெற அல்லது புதுப்பிக்க (Renewal) விரும்பும் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை செய்ய கூடுதலான கண் நிபுணர்களுக்கு (Opticians) அஜ்மான் காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அஸ்தெர் ஆப்டிக்ஸ், யூனியன் ஆப்டிக்ஸ், ஜூ ஆப்டிக்ஸ் மற்றும் மோ ஆகிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களில் அஜ்மான் காவல்துறை யூனியன் ஆப்டிகல்ஸ் கையெழுத்திட்டுள்ளதாக அஜ்மான் காவல்துறையின் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமத் துறையின் (Drivers Licensing Department) இயக்குநர் கர்னல் சுல்தான் கலீஃபா அபு முஹைர் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து எமிரேட்டுகளிலும், இந்த நிறுவனங்கள் அவற்றின் கிளைகளைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமின்றி, கண் பரிசோதனைக்கு 100 திர்ஹம்கள் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குனர் முஹைர் அவர்கள் கூறுகையில், சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப சிறந்த சேவைகளை வழங்குவதை இலக்காகக் கொண்ட வாடிக்கையாளர்களின் கண்ணோட்டங்களை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்த பின்னரே இந்த நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கண்பார்வை சோதனை மையம், லைசன்ஸ் ரினியூவல் செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், உயர் தரம் மற்றும் தரத்துடன் இருக்கும் சரியான தேர்வு செயல்முறையை உறுதி செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!