அமீரக செய்திகள்

துபாய்: ஒரே நாளில் மட்டும் 20 இலட்சம் பேர் பொது போக்குவரத்தை பயன்படுத்தி சாதனை.! இளவரசர் ஷேக் ஹம்தான் நன்றி தெரிவித்து ட்வீட்.!!

துபாயில் ஒரே நாளில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு புதிய சாதனையை குறிப்பதாக துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுப் போக்குவரத்துச் சேவையின் புதிய சாதனை குறித்து கூறுகையில், உலகின் சிறந்த பொதுப்போக்குவரத்து சேவைகளை வழங்கியதற்காக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்திற்கு (RTA) நன்றி என்றும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் இதுபோலவே, 2026 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும் வான்வழி டாக்ஸி சேவை இந்த குறிப்பிடத்தக்க வெற்றிக் கதையில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என்றும் ஷேக் ஹம்தான் கூறியுள்ளார். மேலும் பொது மற்றும் பகிரப்பட்ட போக்குவரத்து இயக்கமானது, கடந்த செவ்வாய்கிழமை (பிப்.21) அன்று 2,003,057 ரைடர்ஸ் என்ற சாதனையைப் படைத்துள்ளதாகவும் RTA அறிவித்துள்ளது.

இது வழக்கமான வார நாட்களில் (புத்தாண்டு கொண்டாட்டத்தினை தவிர்த்து) துபாயில் பதிவுசெய்யப்பட்ட தினசரி பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை என கூறப்பட்டுள்ளது.

அதன்படி துபாய் மெட்ரோவின் ரெட் லைன்ஸில் 571,803 பயணிகளும், கிரீன் லைன்ஸில் 249,644 பயணித்துள்ளனர். அதேவேளை, துபாய் டிராம், சுமார் 26,931 பேருக்கு சேவை செய்துள்ளது. மேலும், 430,739 பயணிகள் பொதுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாகவும், கடல்வழிப் போக்குவரத்தில் 48,579 பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பகிரப்பட்ட இயக்கமான இ-ஹெய்ல், வாடகை ஸ்மார்ட் கார் மற்றும் பஸ் ஆன் டிமாண்ட் போன்றவற்றின் மூலம் 151,442 பயணிகளும் துபாயில் உள்ள டாக்சிகள் மூலம் 523,919 பயணிகளும் பயணம் செய்துள்ளதாக தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button
error: Content is protected !!