அமீரக செய்திகள்

துபாயின் பல சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த RTA..

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வாகன ஓட்டிகளுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (பிப்.9) தொடங்கும் UAE Tour Women 2023 சைக்கிள் பந்தயம் நிகழ்விற்காக துபாய் முழுவதும் பல்வேறு சாலைகளை மூடுவதாக RTA ட்விட்டரில் அறிவித்துள்ளது.

எனவே, மதியம் 1:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை சாலைகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு வாகன ஓட்டிகளையும் குடியிருப்பாளர்களையும் RTA வலியுறுத்தியுள்ளது. சாலைகள் மூடப்படுவதால் ஓட்டுநர்கள் தங்களது இலக்கை (destination) அடைய கூடுதல் நேரம் தேவைப்படும், ஆகையால், மாற்று வழித்தடங்களை பயன்படுத்துமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சைக்கிளிங் பந்தயத்தின் போது சைக்கிள் ஓட்டுநர்கள் கடந்து செல்லும் குறிப்பிட்ட தெரு சந்திப்புகளில் 10-15 நிமிடங்களுக்கு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் கொடியசைத்து போர்ட் ரஷீத்தில் (Port Rashid) தொடங்கப்படும் முதல் கட்ட சைக்கிளிங் பந்தயமானது அமீரகத்தைச் சுற்றி இறுதியாக ஜெபல் ஹஃபீத்தின் (Jebel Hafeet) உச்சியில் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த பாதை UAE சுற்றுப்பயணத்தின் உன்னதமான இடங்களான ராஸ் அல் கோர் (Ras al Khor), மேதான் ரேஸ்கோர்ஸ் (Meydan Racecourse), உம் சுகீம்(Umm Suqeim) மற்றும் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி (Dubai Sports City) ஆகிய இடங்களைத் தொட்டு, பாம் ஜுமைரா (Palm Jumeirah) மற்றும் துபாய் துறைமுகத்தின் வழி சைக்கிளிங் ஓட்டுநர்கள் கடந்து செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, நான்கு சுற்றுகளாக பந்தயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிப்ரவரி 9 முதல் 12 வரை சுமார் 468 கி.மீ தொலைவிற்கு பந்தயம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், பாதிக்கப்படும் பாதைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. Port Rashid to Al Khaleej St
  2. Infinity Bridge
  3. Baniyas Rd
  4. Al Rabat St
  5. Tripoli St
  6. Sheikh Zayed Bin Hamdan Al Nahyan St
  7. Manama St
  8. Ras Al Khor St
  9. Al Meydan St
  10. Al Hadiqa St
  11. Al Wasl St
  12. Umm Suqeim St
  13. Al Qudra St
  14. Hessa St
  15. Dubai Sports City
  16. Al Fay Rd
  17. Sheikh Mohammed Bin Zayed Service Rd
  18. King Salman Bin Abdul Aziz Al Saud St
  19. Dubai Harbour

UAE Team ADQ:

UAE Team ADQ என்பது UAE ஐ உலகளாவிய மேடையில் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் சைக்கிளிங் அணியாகும். மேலும், இந்த அணியானது யூனியன் சைக்ளிஸ்ட் இன்டர்நேஷனல் (UCI) இன் ஒரு பகுதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் சைக்கிளிங் சமூகத்தை மாற்றியமைப்பதில் ஈடுபட்டுள்ள 16 திறமையான ரைடர்கள் உட்பட ஆர்வமுள்ள நிபுணர்களைக் கொண்டுள்ள இந்த அணி 2021 இல் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், சைக்கிளிங் நான்கு சுற்றுகளாக நடைபெறும் நிலையில், சுற்றுகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுற்று 1: போர்ட் ரஷித் – துபாய் துறைமுகம் (109 கிமீ)

சுற்று 2: அல் தஃப்ரா கோட்டை – அல் மிர்ஃபா (133 கிமீ)

சுற்று 3: ஹஸ்ஸா பின் சயீத் ஸ்டேடியம் – ஜெபல் ஹஃபீத் (107 கிமீ)

சுற்று 4: பாத்திமா பின்த் முபாரக் லேடீஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி – அபுதாபி பிரேக்வாட்டர் (119 கிமீ).

Related Articles

Back to top button
error: Content is protected !!