அமீரக செய்திகள்

UAE: போக்குவரத்து அபராதம் செலுத்துதல், ட்ரைவிங் லைசன்ஸ் ரினியுவல் என அனைத்து வாகன சேவைகளுக்குமான மொபைல் சென்டர்..!! இன்று இயங்கும் என அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கான முக்கிய அப்டேட் ஒன்றினை ஷார்ஜா காவல்துறை வெளியிட்டுள்ளது. ஷார்ஜா காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, போக்குவரத்து அபராதம் செலுத்துவது முதல் ஓட்டுநர் உரிமம் (லைசன்ஸ்) புதுப்பித்தல் வரை சுமார் 30 க்கும் மேற்பட்ட சேவைகளை ஷார்ஜா ஓட்டுநர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் ஒரு மொபைல் சென்டரில் பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவைகள் இன்று (பிப். 4 ) மொபைல் சென்டரில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மொபைல் சர்வீஸ் சென்டரானது, அல் சய்யூ சப்அர்ப் கவுன்சிலில் (Al Sayyouh Suburb Council) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது. அதேசமயம், அமீரகத்தில் ஏற்கனவே, ஆயிரக்கணக்கான போக்குவரத்து பரிவர்த்தனைகள் ஆன்லைன் வாயிலாக செய்யப்படுகின்றன என்றாலும், இன்னும் இதுபோன்ற ஸ்மார்ட் சென்டர்கள் மூலம் சேவைகளைப் பெற குடியிருப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இன்று மொபைல் சென்டர்களில் 34 போக்குவரத்து மற்றும் குற்றச் சேவைகள் வழங்கப்படும். அவற்றின் சில விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாகன சோதனைகளுக்கான சேவைகள்:

 • வாகன உரிமம் வழங்குதல் (Vehicle licence issuance)
 • வாகனம் மறுபதிவு (Vehicle re-registration)
 • வாகன உரிமம் புதுப்பித்தல் (Vehicle licence renewal)
 • வாகன உரிமம் மாற்றம் (Vehicle license replacement)
 • சேதமடைந்த வாகன உரிமம் (Damaged vehicle licence)
 • வாகன உரிம தரவுகளை புதுப்பித்தல் (Vehicle licence data modification)
 • வாகன உரிம தரவு மாற்றம் (Vehicle transfer)
 • வாகனத்தை டிரான்ஸ்ஃபர் செய்தல் (UAEக்குள்)
 • வாகனத்தை டிரான்ஸ்ஃபர் செய்தல் (UAEக்கு வெளியே)
 • பதிவு இல்லாமல் உரிம சான்றிதழ்கள் வழங்குதல் (Licence certificates without registration)
 • அனுமதி சான்றிதழ் (Clearance certificate)

ஓட்டுனர்களுக்கான சேவைகள்:

 • கண் பரிசோதனை (Eye test)
 • வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து (Vehicle driving licence cancellation)
 • உரிமத் தரவு மாற்றம் (Licence data modification)
 • போக்குவரத்து கோப்பு திறப்பு (Traffic file opening)
 • வாகன வகை சேர்த்தல் (category addition)
 • ஓட்டுநர் உரிமம் பரிமாற்றம் (Driving licence transfer)
 • ஓட்டுநர் உரிமம் வழங்குதல் (Driving license issuance)
 • ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் (Driving licence renewal)
 • சேதமடைந்த ஓட்டுநர் உரிமம் (Damaged driver’s licence)
 • போக்குவரத்து கோப்பு தரவு மேம்படுத்தல் (Traffic file data update)

போக்குவரத்து அபராதம் தொடர்பான சேவைகள்:

 • போக்குவரத்து அபராதம் செலுத்துதல் (Traffic fine payment)
 • போக்குவரத்து புள்ளிகள் டிரான்ஸ்ஃபர் செய்தல் (Traffic points transfer)
 • பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவித்தல் (Release impounded vehicle)

எனவே, இதுபோன்ற சேவைகளை குடியிருப்பாளர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப மொபைல் சென்டரை அணுகி பயனடையலாம் என்பது இந்த புதிய தொடக்கத்தின் சிறப்பம்சமாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!