ஒரே நாளில் மூன்று முறை உலுக்கிய பூகம்பம்.. நிலைகுலைந்த மக்கள்.. உலக நாடுகள் கவலை..!!

துருக்கியில் இன்று சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு நாடே நிலைகுலைந்து இருக்கும் நிலையில் மூன்றாவதாக மீண்டும் ஒரு நிலநடுக்கம் துருக்கியில் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையத்தின்படி, மத்திய துருக்கியில் 6.0 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பின் மதிய வேளையில் 7.6 என்ற ரிக்டர் அளவில் இரண்டாவது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் துருக்கியை தாக்கியது. 24 மணி நேரத்திற்குள் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தாக்கிய பின்னர் நாட்டில் ஏற்பட்ட மூன்றாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.
இன்று காலையில் முதலில் துருக்கி-சிரியா எல்லை பகுதியில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இந்த நூற்றாண்டில் துருக்கியை தாக்கிய மிக மோசமான நிலநடுக்கம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் 900 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சிரியாவின் எல்லையில் சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்பொழுது மூன்றாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.