அமீரக சட்டங்கள்

முஸ்லிம் அல்லாதவர்களுக்கான புதிய சட்டம் இன்று முதல் அமல்.. அமீரக அரசு அறிவிப்பு..!!

UAE அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை புதிய சட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத வெளிநாட்டவர்களின் தனிப்பட்ட விவரங்கள் குறித்த புதிய ஃபெடரல் ஆணைய-சட்டமானது பிப்ரவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று தெரியவந்துள்ளது. இந்த சட்டம், இருதரப்பு அல்லது ஒருதலைப்பட்சமாக துவங்கக் கூடிய நடைமுறைகளையும் குறிப்பிட்டுள்ளது.

அதுபோல, ஃபெடரல் ஆணைய தனிநபர் அந்தஸ்து சட்டம் திருமண நிலை, ஆவணப்படுத்துதல் மற்றும் நீதிமன்றங்களில் செயல்படுத்தப்படும் திருமண ஒப்பந்தம் போன்ற நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.

இது குறித்து பிரபல சட்ட வல்லுனரான டாக்டர் ஹசன் எல்ஹாய்ஸ் அவர்கள் கூறுகையில், இது நீதிமன்ற நடைமுறைகளில் பெண்களுக்கு சம உரிமையை வழங்கும் என்று பாராட்டியுள்ளார். அத்துடன் நீதிமன்றங்களில் பெண்களின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்திற்கு சமமாக இருக்கும் என்றும் அவர்களுக்கு 18 வயது வரை பரம்பரை, விவாகரத்து மற்றும் குழந்தைகளின் காவல் (joint custody) போன்றவற்றில் சம உரிமைகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதேசமயம், பெற்றோர்களுக்கு இடையில் விவாகரத்து நடைபெறும் பட்சத்தில் தங்கள் பெற்றோரை தேர்வு செய்யும் உரிமை குழந்தைகளுக்கு உண்டு என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சட்டத்தின்படி, இரு பெற்றோர்களும் குழந்தை பாதுகாவலராக (Guardian) இருக்கலாம். ஆனால், ஒருவர் மற்றொருவரை பாதுகாவலில் இருந்து விலக்குவதற்கான மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமாகும். அதன்படி, இந்த வழக்கில் இரு பெற்றோரும் நீதிமன்றத்தில் கோரிக்கைகளை தாக்கல் செய்ய முடியும். பின்னர் நீதிமன்றம் குழந்தையின் எதிர்காலத்திற்கு சிறந்ததை தேர்வு செய்து தீர்ப்பளிக்கும் என்று எல்ஹாய்ஸ் கூறியுள்ளார்.

மேலும், அரசாங்கம் தற்போது தந்தை தெரியாத குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கத் தொடங்கியுள்ளது. அதேசமயம், நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டம் அரசு நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சிவில் திருமண ஒப்பந்தங்களை அங்கீகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், விவாகரத்துக் கோரி வழக்கு தொடுக்க, ஒருவர் மற்றொருவரை அவதூறு செய்யவோ, குற்றம்சாட்டவோ இல்லாமல் திருமணத்தை முறித்துக் கொள்வதற்கான முறையான காரணத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தின்படி, முக்கியமான திருத்தம் என்னவென்றால், திருமணமான ஆண்டுகள், இருவரின் நிதி நிலை மற்றும் விவாகரத்துக்கு கணவர் எவ்வளவு பொறுப்பு என்பதை உள்ளடக்கிய பல காரணிகளின் அடிப்படையில் ஜீவனாம்சம் தீர்மானிக்கப்படும் என்பது தெரியவந்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!