ADVERTISEMENT

அமீரக காவல்துறைனா சும்மாவா.. ஃபோன் மோசடி மூலம் 16,000 திர்ஹம்ஸை இழந்த நபரின் பணத்தை உடனே மீட்டுக்கொடுத்த காவல்துறை..

Published: 3 Feb 2023, 4:33 PM |
Updated: 3 Feb 2023, 4:33 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரக நாட்டவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மோசடி மூலம் திருடப்பட்ட 16,000 திர்ஹம்களை மீட்பதற்கு அஜ்மான் காவல்துறை உதவியுள்ளது. இந்நிகழ்வு குறித்து அஜ்மானில் உள்ள அல் மதீனா காவல்நிலையத்தின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் கைத் கலிபா அல் காபி அவர்கள் கூறுகையில், அரபிய நபர் ஒருவர், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மோசடி மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதன்பிறகு, அவரது தனிப்பட்ட விவரங்களை சமர்ப்பிக்குமாறு காவல்துறை அதிகாரி பாதிக்கப்பட்டவரை வலியுறுத்தியுள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி விசாரணை செய்துள்ளனர். பின்னர், பாதிக்கப்பட்டவரின் பணம் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட மோசடி சம்பவம் குறித்த தரவுகளைப் பெற்றுள்ளனர். சுமார் ஒரு வார முயற்சிக்குப் பிறகு, திருடப்பட்ட தொகை மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரை ஏற்று, காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் ஈடுபட்டு, தக்க நடவடிக்கையை மேற்கொண்டதால் திருடப்பட்ட பணம் மீட்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர் தனது குழந்தைகளுடன் காவல் நிலையத்திற்கு சென்று காவல்துறையின் அதிவேக நடவடிக்கைகளுக்காக அவரது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT