அமீரக செய்திகள்

UAE: மூன்று வருடங்களாக ஒரு முறை கூட போக்குவரத்து அபராதம் பெறாத ஓட்டுநர்களுக்கு காத்திருந்த பரிசு!! காவல்துறையின் அசத்தலான முயற்சி…!!

ஒரு வாகனத்தை இயக்க தகுதியான ஓட்டுனர் என்பதற்கு அங்கீகாரமான டிரைவிங் லைசன்ஸைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பொறுமை போன்றவற்றை லைசன்ஸ் கிடைத்த பிறகு பலரும் கடைபிடிப்பதில்லை. அலட்சியம் மற்றும் விதிமீறல்களால் போக்குவரத்து அபராதத்தை செலுத்தி வரும் ஓட்டுநர்களின் மத்தியில், சில ஓட்டுநர்கள் நேர்மையாக சாலை விதிகளை பின்பற்றியும் வருகின்றனர் என்பது சற்று வியப்பைத்தான் ஏற்படுத்துகிறது.

அத்தகைய சிறந்த ஓட்டுநர்களை அபுதாபி காவல்துறையின் ஹேப்பினஸ் ரோந்துப்படை கண்டறிந்துள்ளது. மேலும், அவ்வாறு அனைத்து போக்குவரத்து விதிகளையும் பின்பற்றிய அல் அய்னில் உள்ள 30 ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் சில ஆச்சரியமான பரிசுகளை அபுதாபி காவல்துறை வழங்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், இதே போன்ற பார்க்கிங் அபராதம் கூட பெறாத சிறந்த ஓட்டுனர்களை கண்டறியும் பணியை ரோந்துப் படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து அல்அய்ன் போக்குவரத்துத் துறையின் இயக்குனர் கர்னல் மேட்டர் அப்துல்லா அல் முஹைரி கூறுகையில், பொறுப்பான நல்ல ஓட்டுநர்களை ஊக்குவிக்கவும், சாலைகளை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் நேர்மறையான நடத்தைகளை மேம்படுத்தவும் அதிகாரிகளின் முயற்சிகளின் ஒரு பகுதியாக Ya Hafez முன்முயற்சி அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மூன்று ஆண்டுகளாக சாலை விதிமீறல்களில் ஈடுபடாமல் போக்குவரத்து பதிவுகளை சிறப்பாக வைத்திருந்ததற்காக அவர்களை வாழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், டிவிகளை பரிசுகளாக வழங்குவதைக் கண்ட ஓட்டுநர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியதோடு, தங்களின் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு பெருமையை வெளிப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு, போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தையும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், துயரமான விபத்துக்களைத் தடுப்பதிலும் ஒருவரின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு நல்ல ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருந்தவர்களில் அல் அய்ன் போக்குவரத்து புலனாய்வுத் துறையின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் சயீத் அப்துல்லா அல் கல்பானி மற்றும் அல் அய்ன் பிராந்தியத்தின் பாதுகாப்பு ஊடகத் துறையின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் ஒபைத் அல் காபி ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!