அமீரக செய்திகள்

UAE: பிக் டிக்கெட் எடுத்த முதல் தடவையே 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசு.. யார் அந்த அதிர்ஷ்டகாரர்.?

இந்த வாரம் நடைபெற்ற அபுதாபியின் பிக் டிக்கெட் லைவ் ஷோவில், முதல்முறையாக பங்கேற்ற சாம் ஹெய்டாரிடோர்ஷிசி என்பவர் முதல் பரிசை வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவரது அதிர்ஷ்டத்திற்கு கிடைத்த பரிசுத் தொகையான 15 மில்லியன் திர்ஹம்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

துருக்கிய நாட்டைச் சேர்ந்த சாம், நான்கு வருடங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். தற்போது ஒரு மருத்துவ நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உள்ள நிலையில், ஆன்லைனில் பிக் டிக்கெட்டை வாங்கியுள்ளார். மேலும், பிப்ரவரி முதல் வாரத்தில் buy-two-get-one-free என்ற ப்ரோமோஷனைப் பயன்படுத்தி டிக்கெட்டை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனையடுத்து பிக் டிக்கெட்டின் பிரதிநிதிகள் சாமின் வெற்றியைப் பற்றிச் சொல்ல தொலைபேசியில் முயற்சித்தபோது, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க நெருங்கிய நண்பர்களிடமிருந்து அவருக்கு வந்த தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகளின் காரணமாக தெரிவிக்க முடியாமல் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

தனது வெற்றி குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த சாம், கடந்த ஒரு வாரமாக பிக் டிக்கெட் இணையதளத்தைப் பின்தொடர்ந்து தனது பெயரை அறிவிப்பில் தேடியதாகவும், ஆனால் வெற்றியாளராகப் பெயரிடப்படுவார் என எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “Thank you, Big Ticket! You have changed my life!” என்று கூறி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

அடுத்தபடியாக, இரவு நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசுத் தொகையாக 1 மில்லியன் திர்ஹம்களை எமிராட்டி நாட்டவரான சலீம் அல்பஸ்தகி என்பவர் வென்றுள்ளார். இவர் கடந்த 15 வருடங்களாக டிக்கெட்டுகளை வாங்கி வருவதாகவும், ஒரு ப்ரோமோஷன் மூலம் பிக் டிக்கெட்டைப் பற்றி அறிந்து பின்னர் டிக்கெட்டுகளை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தொடர்ந்து பிக் டிக்கெட்டுகளை வாங்குவதாக சலீம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!