அமீரக செய்திகள்

துபாயில் பார்க், பொழுதுபோக்கு இடங்கள் செயல்படும் நேரங்கள் நீட்டிப்பு.. அறிவிப்பை வெளியிட்டுள்ள முனிசிபாலிட்டி..!!

துபாயில் ரமலான் மாதத்தை முன்னிட்டு பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், துபாயின் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றைலாவாசிகள் ரமலான் மாதத்தில் அமீரகத்தில் உள்ள பூங்காக்களில் அதிக நேரத்தை செலவிடலாம் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் முனிசிபாலிட்டி தெரிவிக்கையில் “துபாயில் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களின் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்துள்ளதால், இந்த மாதத்தில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உங்கள் நேரத்தை அனுபவிக்கலாம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

துபாய் முனிசிபாலிட்டி, அப்டேட் செய்யப்பட்டுள்ள இயக்க நேரத்தை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளது. அதன்படி, சில குடியிருப்பு பூங்காக்கள் மற்றும் லேக் (lake) அதிகாலை 1 மணி வரை திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. துபாய் சஃபாரி பார்க் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மற்ற பொழுதுபோக்கு இடங்களில் மாலை நேரங்களில் செயல்படும் நேரத்தை நீட்டித்துள்ளன.

துபாய் முனிசிபாலிட்டியின் கீழ் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கான இயக்க நேரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  • பர் துபாய் மற்றும் தேராவில் உள்ள ரெசிடென்ஷியல் பார்க் மற்றும் லேக்காலை 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை
  • துபாய் சஃபாரி பார்க்காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
  • க்ரீக் (அல் கோர்) பார்க்காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை
  • அல் மம்சார் பார்க்காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
  •  ஜபீல் பார்க், அல் சஃபா பார்க், அல் முஷ்ரிஃப் நேஷனல் பார்க்மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை
  • அல் முஷ்ரிஃப் நேஷனல் பார்க்கில் மவுண்டன் பைக் டிராக்காலை 6.30 முதல் மாலை 6 மணி வரை
  • குரானிக் பார்க்காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை
  • குரான் பார்க்கில் அற்புதங்களின் குகை மற்றும் பசுமை இல்லம் (Cave of Miracles and the Greenhouse)மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை
  • துபாய் ஃபிரேம்காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை
  • தி சில்ட்ரென்ஸ் சிட்டி (The Children’s City)திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை

Related Articles

Back to top button
error: Content is protected !!