அமீரக செய்திகள்

UAE: இனி எமிரேட்ஸ் டிராவில் 100 மில்லியன் திர்ஹம்களை வெல்வது எளிது!! எப்படி தெரியுமா?

ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ் டிரா அதன் MEGA7 டிராவில் ஒரு அற்புதமான மாற்றத்தை அறிவித்துள்ளது, இது பங்கேற்பாளர்களின் வெற்றி பெறும் செயல்முறையை எளிதக்குவதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது டிக்கெட்டுகளின் ஆர்டர்கள் அல்லது வெற்றி எண்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய மாற்றத்தின் மூலம், பங்கேற்பாளர்கள் ஏழு இலக்கங்களை எந்த வரிசையிலும் பொருத்துவதன் மூலம் ஜாக்பாட்டைக் கோரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மாற்றங்களின்படி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் மிகப்பெரிய பரிசினை வழங்கும் எமிரேட்ஸ் டிராவின் பங்கேற்பாளர்கள் 7 எண்களில் 3 ஐப் பொருத்துவதன் மூலம் 7 திர்ஹம்களையும், 7 இல் 4 ஐப் பொருத்துவதின் மூலம் 50 திர்ஹம்களையும் மற்றும் 7 இல் 5 எண்களைப் பொருத்துவதன் மூலம் சுமார் 1,000 திர்ஹம்களையும் பரிசுகளாக வெல்ல முடியும் என்பது தெரிய வந்துள்ளது.

அதுபோல, 250,000 திர்ஹம்களை வெல்வதற்கு 7 இல் 6 எண்களைப் பொருத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம், ஏழு எண்களையும் எந்த வரிசையிலும் பொருத்தும் பங்கேற்பாளர்கள் முதல் பரிசான 100 மில்லியன் திர்ஹம்களை பரிசாக வெல்லாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட மாற்றங்களை தவிர்த்து, டிராவில் பங்கேற்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முந்தைய 70 சாய்ஸ்களுடன் ஒப்பிடும்போது, பங்கேற்பாளர்கள் ​​7 முதல் 37 வரையிலான தங்களின் ஏழு எண்களைத் தேர்ந்தெடுத்து, 50 திர்ஹம் நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தி, விளையாட்டை இன்னும் விறுவிறுப்பானதாக மாற்றுவதன் மூலம் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எமிரேட்ஸ் டிராவின் நிர்வாகக் கூட்டாளரான முகம்மது அலவாடி அவர்கள் கூறுகையில், ‘Games for All’ என்ற முன்முயற்சியின் மூலம் தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் திரும்பக் கொடுப்பதற்கான வாக்குறுதியை நிறைவேற்றுவதில் எமிரேட்ஸ் டிரா உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதுபோல, அதிர்ஷ்டம் கொண்டுள்ள வெற்றியாளர்கள் தங்கள் கனவுகளை அடைவதற்கும் வாழ்க்கையை மாற்றுவதற்கும் ஒரு படி மேலே உயர்த்துவோம் என்று நம்புவதாகக் கூறியுள்ளார். அத்துடன் இந்த டிராவை மாற்றுவதற்கும் பங்கேற்பாளர்கள் எந்த வரிசையிலும் வெற்றி பெற உதவுவதற்கும், டிரா மெஷின்கள் உட்பட கேம் வடிவமைப்பை திருத்தியமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த மாற்றம் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் 100 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசை வெல்வதற்கு பங்கேற்பாளர்களை நெருங்கச் செய்யும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை ‘For a Better Tomorrow’ என்ற டிரா தொடங்கி 18 மாதங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த டிராவின் மூலம் 87 மில்லியனுக்கும் அதிகமான ரொக்கப் பரிசுகளை வழங்கியுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!