அமீரக செய்திகள்

UAE: ஈத் விடுமுறையில் வானவேடிக்கைகளைக் காண சிறந்த இடங்களின் பட்டியல் இதோ… மிஸ் பண்ணிடாதீங்க!!

அமீரகத்தில் ஈத் பண்டிகையை குடியிருப்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும் மக்கள் ஈத் விடுமுறையை தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்தித்து வாழ்த்து கூறுவது, சுவையான உணவுகள் சமைத்து பரிமாறுவது மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு இடங்களுக்குச் சென்று நேரத்தை செலவிடுவது என பலரும் ஈத் விடுமுறையை அனுபவித்தும் வருகின்றனர்.

இந்த ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகம் தனது நாட்டு குடியிருப்பாளர்கள் ஈத் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாட, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை, தள்ளுபடியுடன் கூடிய விற்பனை, இலவச பார்க்கிங் மற்றும் முன்கூட்டியே சம்பளம் போன்றவற்றை அறிவித்துள்ளது. மேலும், மக்களுக்கு குதூகலமளிக்கும் வகையில் எமிரேட்டில் ஏராளமான வானவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

எனவே, அமீரக குடியிருப்பாளர்கள் இந்த ஈத் பண்டிகை விடுமுறையின் முதல் இரண்டு இரவுகளில் வண்ணமயமான வானவேடிக்கையை துபாய் மற்றும் அபுதாபியில் கண்டுகளிக்கலாம். அவ்வாறு உங்களை பிரம்மிக்க வைக்கும் வானவேடிக்கைகளைக் கான பின்வரும் சிறந்த இடங்களை உங்களின் வசதிக்கேற்ப நீங்கள் தேர்வு செய்யலாம்:

துபாய்

1. Etisalat by e& Beach Canteen: இன்று (ஏப்ரல் 21) இரவு 9 மணிக்கு எடிசலாட் பை இ& பீச் கேண்டீனின் பிரபலமான டைனிங் பாப்-அப் எடிசலாட், வாணவேடிக்கை நிகழ்ச்சியை நடத்துகிறது. மேலும், துபாய் உணவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக, இந்த நிகழ்வில் நேரடி பொழுதுபோக்கு, உள்ளூர் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் உணவு பிரியர்கள் தேர்வு செய்ய எண்ணற்ற உணவு வகைகளும் இங்கே உள்ளன.

2. புளூவாட்டர்ஸ்: நாளை (ஏப்ரல் 22)  இரவு 9 மணிக்கு ப்ளூவாட்டர்ஸ் வானவேடிக்கை நிகழ்ச்சியை நடத்துகிறது. துபாய் மெரினாவிலிருந்து தண்ணீருக்கு குறுக்கே அமைந்துள்ளதும் மற்றும் உலகின் மிகப்பெரிய ஃபெர்ரி வீலுமான அய்ன் துபாயை இங்கு குடியிருப்பாளர்கள் காணலாம்.

3. தி பீச், JBR: ஈத் விடுமுறையை அமீரக குடியிருப்பாளர்கள் சிறப்பாக கொண்டாட மற்றொரு சிறந்த வாய்ப்பாக, JBR கடற்கரையில் ஏப்ரல் 22 ஆம் தேதி, இரவு 9 மணிக்கு வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.

4. துபாய் பூங்காக்கள் மற்றும் ரிசார்ட்டுகள்: உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க துபாய் பூங்காக்கள் மற்றும் ரிசார்ட்டுகள் பகுதியில் அமைந்துள்ள ஒய்வு மற்றும் பொழுதுபோக்கு வளாகம் ஏப்ரல் 22 அன்று வானவேடிக்கைகளுடன் ஒளிரும். மேலும் உங்கள் குடும்பத்துடன் சென்று பார்வையிட இது சரியான இடமாக இருக்கும்.

5. குளோபல் வில்லேஜ்: அமீரகத்தின் பிரபலமான குளோபல் வில்லேஜின் 27 வது சீசன் ஏப்ரல் 30 அன்று முடிவடைகிறது, மேலும் இன்று முதல் தினசரி வானவேடிக்கை நிகழ்ச்சிகள்  நடைபெறும். அத்துடன் இங்கு உண்மையான அரபு பிஸ்தா ஐஸ்கிரீம், உள்ளூர் கலைஞர்களின் நேர்த்தியான ஓவியங்கள் மற்றும் பருவகால பானங்களின் வரிசை ஆகியவற்றை நீங்கள் அனுபவிக்க முடியும்.

அபுதாபி

6. யாஸ் ஐலேண்ட்: அபுதாபியில் மிக பிரபலாமான யாஸ் ஐலேண்ட், ஈத் பண்டிகையின் முதல் இரண்டு நாட்களில் இரவு 9 மணிக்கு யாஸ் பே வாட்டர்ஃபிரண்டில் வானவேடிக்கை காட்சிகளை நடத்தும்.

7. கார்னிச் சாலை: அபுதாபியின் பிரபலமான இடங்களில் ஒன்றான அபுதாபி கார்னிச்சில், குடியிருப்பாளர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் விருந்தளிக்கும் வண்ணம் இன்று ஏப்ரல் 21 ம் தேதி வானத்தை வண்ணமயமாக ஒளிரச் செய்யும் வானவேடிக்கை நடைபெறும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!