ADVERTISEMENT

UAE: உற்சாகமான பல சாகச ரைடுகளுடன் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் ‘Adrenark Adventure Park’.. டிக்கெட் இல்லாமல் சுற்றிப்பார்க்கலாம்..!!

Published: 6 Apr 2023, 6:16 PM |
Updated: 6 Apr 2023, 7:17 PM |
Posted By: Menaka

அபுதாபியின் அல் கனா (Al Qana) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய உட்புற சாகசப் பூங்காவான Adrenark Adventure Park, ஈத் அல் ஃபித்ரின் முதல் நாளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. சுமார் 54,000 சதுர அடி பரப்பளவில் அனைத்து வயதினரும் சாகச ரைடுகளை அனுபவிக்கும் வகையில், 20 க்கும் மேற்பட்ட திரில்லிங் ரைடுகளைக் கொண்டு இந்த பார்க் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் மல்டி-லெவல் இ-கார்டிங் டிராக்கில் (multi-level e-karting track) இருந்து கட்டிடத்தின் உள்ளே மூன்று தளங்கள் ஏறும் LED ஸ்லைடுகள், பங்கீ டிராம்போலைன்கள் (bungee trampolines), ரோப் கோர்ஸஸ் (rope courses) மற்றும் உற்சாகமான ரைடுகள் போன்றவற்றை Adrenark Adventure உட்புற சாகசப் பூங்காவில் அனுபவிக்கலாம்.

இது குறித்து பார்க்கின் பொது மேலாளரான பால் ஹாமில்டன் அவர்கள் கூறுகையில், இந்த சாகசப் பூங்கா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு குடும்பத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் வேடிக்கையான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், புதையல் குகைகள், ஏறும் சுவர்கள் போன்ற ஒவ்வொரு ரைடுகளும் பார்வையாளர்களை உல்லாசமான மற்றும் அதிவேக அனுபவத்தை உணரச்செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

கூடுதலாக, அல் கானா நேஷனல் அக்வாரியம், பிரிட்ஜ் லைஃப்ஸ்டைல் ​​ஹப் (Bridge Lifestyle Hub), பிக்சோல் கேமிங் எஸ்போர்ட்ஸ் அரங்கம் (Pixoul Gaming Esports Arena) மற்றும் அமீரகத்தின் மிகப்பெரிய சினிமா வளாகமான சினிமா சிட்டி ஆகியவற்றையும் இந்த பார்க்கின் உள்ளே காணலாம் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இவையனைத்தையும் உள்ளடக்கிய அட்ரினர்க் அட்வென்ச்சர் பூங்காவிற்குள் நுழைந்து அங்குள்ள இடங்களை சுற்றிப்பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் டிக்கெட் இல்லாமல் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT