அமீரக செய்திகள்

200,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு..!! எந்தெந்த மால்களில் தெரியுமா..??

அமீரகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு, சுமார் 200,000 திர்ஹம் மதிப்புள்ள ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பிரச்சாரத்தை துபாய் ஷாப்பிங் மால்ஸ் குரூப் (DSMG) அறிவித்துள்ளது.

வணிக வளாகங்களின் அமைப்பான DSMG, ‘An Eid to remember, an Eidiya to cherish’ என்ற பிரச்சாரத்தை எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 22வரை நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளது. ‘Eidiya’ என்பது ஈத் காலத்தில் பாரம்பரியமாக வழங்கப்படும் பரிசு ஆகும், இது பெரும்பாலும் பணமாக வழங்கப்படுகிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையின் படி, வாடிக்கையாளர்கள் பிரச்சாரத்தில் நுழைவதற்கு பங்கேற்கும் மால்களில் 200 திர்ஹம் செலவழித்து டிஜிட்டல் ரேஃபிளில் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்முதல் ரசீதுகளை மாலில் உள்ள வாடிக்கையாளர் சேவை மேசையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு, ஈத் பண்டிகையின் கடைசி மூன்று நாட்களில் மொத்தம் 22 அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் முதல் ஆறு வெற்றியாளர்களுக்கு 15,000 திர்ஹம்கள் ரொக்கத் தொகையும், அடுத்த ஆறு பேருக்கு 10,000 திர்ஹம்களும் வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள் மற்றும் 10 பேருக்கு 5,000 திர்ஹம்கள் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் துபாயில் உள்ள அல் பர்ஷா மால், அல் பர்ஷா சவுத் மால், அல் குரைர் சென்டழ், அல் புஸ்தான் சென்டர், அல் கைல் கேட், அல் வர்கா சிட்டி மால், அரேபியன் சென்டர், பே அவென்யூ, செஞ்சுரி மால், துபாய் அவுட்லெட் மால், துபாய் ஃபெஸ்டிவல் பிளாசா, வில்லனோவா கம்யூனிட்டி சென்டர், எதிஹாட் மால், லூலு சிலிக்கன் சென்ட்ரல், நாத் அல் ஹமர், ஷோரூக் கம்யூனிட்டி சென்டர், செரினா மார்க்கெட் பிளேஸ், மற்றும் முடோன் கம்யூனிட்டி சென்டர் போன்ற மால்களில் 200 திர்ஹம்ஸிற்கு பொருட்களை வாங்கி பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து DSMG இன் தலைவர் மஜித் அல் குரைர் அவர்கள் கூறுகையில், “எங்கள் புதிய ஈத் பிரச்சாரத்தின் மூலம் எங்கள் வாடிக்கையாளரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!