அமீரக செய்திகள்

UAE: காரை விற்பதற்கு முன் சாலிக் டேக்கை உங்கள் கணக்கிலிருந்து நீக்குவது எப்படி.? தவறினால் அபராதம் பெற வாய்ப்பு..!!

உங்களிடம் உள்ள பழைய காரை விற்க திட்டமிடுகிறீர்களா? ஐக்கிய அரபு அமீரகத்தில் காரின் நிலையை மேம்படுத்துவது முதல் வாங்குபவர்களுக்கு ஆவணங்கள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிப்பது வரை, உங்கள் காரை விற்பனை செய்வதற்கு முன் நீங்கள் பல சட்ட நடைமுறைகளை முடிக்க வேண்டும்.

மேலும், வாகன உரிமையை வாங்குபவருக்கு மாற்றிய பிறகு, முந்தைய உரிமையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சாலிக் டேக்கை அகற்றுவது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், முந்தைய உரிமையாளரின் சாலிக் கணக்கில் இருப்பு இல்லை என்றால் தற்போதைய உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

தேவையான ஆவணங்கள்

சாலிக் டேக்கை அகற்றுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள் அது ஒரு தனிநபரா அல்லது நிறுவனமா என்பதை பொறுத்து மாறுபடும்.

தனிநபர்களுக்குத் தேவைப்படும் ஆவணங்கள்:

>> வாகனத்தின் உரிமை மாறாமல் இருந்தால் மட்டுமே விண்ணப்பதாரரின் சரியான எமிரேட்ஸ் ஐடி தேவைப்படும். சாலிக் டேக்கை விற்காமல் அகற்றுவதற்கு இது பொருந்தும். மேலும், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மற்றும் சாலிக் சேவை கவுண்டர்கள் மூலம் மட்டுமே வாடிக்கையாளர்கள் இந்த செயல்முறையை முடிக்க முடியும்.

நிறுவனங்களுக்குத் தேவைப்படும் ஆவணங்கள்:

>> விண்ணப்பதாரர்கள் சாலிக் டேக் அகற்றப்பட வேண்டிய வாகனத்தின் ப்ளேட் நம்பர் மற்றும் சாலிக் எண்களை உள்ளடக்கிய, நிறுவனத்திடமிருந்து கையொப்பமிடப்பட்ட மற்றும் முத்திரையிடப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

செயல்முறை:

வாடிக்கையாளர்கள் நேரிலும் ஆன்லைனிலும் சாலிக் டேக்கை அகற்றுவதற்கான சேவையை அணுகலாம். அதாவது இணையதளம், ஸ்மார்ட் அப்ளிகேஷன் மற்றும் கால் சென்டர் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் முடிவை உடனடியாகப் பெற முடியும். அதேசமயம் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மற்றும் சாலிக் வாடிக்கையாளர் சேவை கவுண்டர்கள் மூலம் இதனை முடிக்க சில நிமிடங்கள் மட்டுமே ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!