ADVERTISEMENT

UAE: WPS மூலம் சம்பளம் வழங்காத 3,000 க்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…!!

Published: 7 Apr 2023, 9:24 AM |
Updated: 7 Apr 2023, 9:36 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 3,000 க்கும் மேற்பட்ட முதலாளிகளை/நிறுவனங்களை ஊதிய பாதுகாப்பு அமைப்பு (WPS) மூலம் சம்பளம் வழங்கத் தவறியதற்காக பொது வழக்கு விசாரணைக்கு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமீரகத்தில் ஊழியர்களுக்கு தாமதமின்றி சரியான நேரத்தில் சம்பளம் வழங்காத நிறுவனங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்த அமைச்சர்கள் தீர்மானம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலம் ஊழியர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MOHRE) அதன் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை நேரடி வருகைகள் மற்றும் இ – ஆய்வு அமைப்புகள் மூலம் கண்காணித்தும் வருகிறது.

இதனடிப்படையில் கிடைத்துள்ள தகவல்களின் படி, 2022 ஆம் ஆண்டில் தனியார் துறை நிறுவனங்களில் 612,000 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை அமைச்சகம் நிறைவு செய்துள்ளதாகவும் அவற்றில் 12,000 க்கும் மேற்பட்ட விதிமீறல்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமீறல்களுக்கு உடனடியாக அபராதங்களும் விதிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

வேலைவாய்ப்பிற்கான தேவைகளுக்கு இணங்காதது, தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்காதது, WPS விதிகள், வீட்டுவசதி/தங்கும் தரநிலைகளுக்கு இணங்காதது, ஒப்பந்தங்கள் மற்றும் பணி அனுமதிகளை வழங்குவதற்கான விதிமுறைகளுக்கு இணங்காதது, உரிமம் பெறாத வேலை அல்லது தற்காலிக வேலைவாய்ப்பு நிறுவனம், போலி எமிராட்டிசேஷன், கோடை கால மதிய ஓய்வு இனைவேளையை தொழிலாளர்களுக்கு வழங்காதது மற்றும் வீட்டுத் தொழிலாளர்களின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை வைத்திருக்கும் முதலாளிகள் போன்றவையும் இந்த விதிமீறல்களில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து எமிரேடிசேஷன் விவகாரங்களுக்கான துணைச் செயலாளரும், தொழிலாளர் விவகாரங்களுக்கான துணைச் செயலாளருமான ஆயிஷா பெல்ஹர்ஃபியா அவர்கள் கூறுகையில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 81 சதவீத தொழிலாளர் புகார்களை அமைச்சகம் சுமூகமாக முடித்து வைத்துள்ளதாகவும், மீதமுள்ள தொழிலாளர்களின் வழக்குகளை நீதிமன்றங்களுக்கு பரிந்துரைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதேசமயம், புகார்தாரர்கள் மற்றும் தொழிலாளர் நீதிமன்றங்கள் ஆகிய இருவருக்கும் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே இணக்கமான தீர்வுகளைக் கண்டறிய சட்ட ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் செயல்படுவதாகக் கூறியுள்ளார்.

மேலும், வேலை உறவில் இரு தரப்பினரையும் பாதுகாப்பதற்கும் அவர்களின் உரிமைகளை நியாயமான முறையில் உத்தரவாதப்படுத்துவதற்கும் MOHRE கொண்டுவந்த ஊதிய பாதுகாப்பு அமைப்பு (WPS) முறையை பயன்படுத்த தொடர்ந்து அவர் வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.