அமீரக செய்திகள்

ஷார்ஜாவில் புதிய பேருந்து வழித்தடத்தை அறிமுகம் செய்துள்ள SRTA!! பேருந்து நிலையங்கள், பேருந்து நேர அட்டவணை என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் உள்ளே..

ஷார்ஜா எமிரேட்டில் புதிதாக ஒரு பேருந்து வழித்தடம் திறக்கப்பட்டுள்ளதாக ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) அறிவித்துள்ளது. பயணிகள் இந்த வழித்தடத்தில் கல்பாவின் நீண்ட கரையோரத்தை ரசித்துக் கொண்டே பயணத்தை அனுபவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் (செப்டம்பர் 6) இந்த புதிய பேருந்து வழித்தடம் – 66, ருகைலத் (Rugaylat) சாலையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் உள்ள பேருந்து நிலையங்கள் பற்றியும், பேருந்து நேரம் பற்றியும் இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

ஷார்ஜா பேருந்து வழித்தடம் 66:

எமிரேட்டின் ருகைலத் சாலையில் உள்ள 12 நிலையங்கள் வழியாக இந்த வழித்தடம் செல்கிறது. அவற்றின் பட்டியலைப் பின்வருமாறு பார்க்கலாம்:

பேருந்து நிலையங்கள்:

  1. கார்னிச் 1
  2. கார்னிச் 2
  3. பைத் ஷேக் சயீத் பின் ஹமத் அல் காசிமி
  4. தாபித் பின் கைஸ் மசூதி
  5. கல்பா மெடிக்கல் சென்டர்
  6. எதிஹாட் கல்பா ஸ்போர்ட்ஸ் க்ளப்
  7. கல்பா இண்டஸ்ட்ரியல் ஏரியா 1
  8. கல்பா இண்டஸ்ட்ரியல் ஏரியா 2
  9. அல் சாஃப் 7
  10. கவர்மென்ட் பில்டிங்க்ஸ்
  11. கல்பா வாட்டர்ஃப்ரண்ட்
  12. கத்மத் மிலாஹா எல்லை

பேருந்து இயங்கும் நேரங்கள்:

SRTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பேருந்து கார்னிச் 1 நிலையத்திலிருந்து தினமும் காலை 7.30 மணி மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படுகிறது. அதேபோல், காத்மத் மிலாஹா புள்ளியில் இருந்து, தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை பேருந்து சேவை கிடைக்கிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!