அமீரக செய்திகள்
துபாயின் முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல்!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

துபாயில் இன்று (புதன்கிழமை) காலையில் அல் கைல் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட வாகன அவசர நிலையை தொடர்ந்து, லத்தீஃபா பின்த் ஹம்தான் பிரிட்ஜை அடுத்து பிசினஸ் பே கிராசிங் பிரிட்ஜை நோக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை எச்சரித்துள்ளது.
ஆகவே, சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சாலையில் கவனமாக இருக்குமாறு துபாய் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இன்று (மே.17) அதிகாலையில், ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட்டில் ஏவியேஷன் கல்லூரிக்கு எதிரே உள்ள பாலத்தின் மீது, அல்-ரபாத் ஸ்ட்ரீட்டை நோக்கிப் பல வாகனங்களுக்கு இடையே விபத்து ஏற்பட்டதால், குடியிருப்பாளர்களை எச்சரித்த காவல்துறை, அப்பகுதியில் வாகன ஓட்டிகள் அவதானத்துடன் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.