அமீரக செய்திகள்

UAE: பயணிகளின் வசதிக்காக ஒன்றிணையும் எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட்!!- இரண்டாவது முறையாக ஒப்பந்தத்தில் கையெழுத்து…

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் ஏர்லைன் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் ஆகியவை பயணிகளுக்கு வசதியான பயண அனுபவங்களை வழங்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தமானது இரு விமான நிறுவனங்களுக்கிடையில் மேலும் பல புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, 2018 ஆம் ஆண்டில், எமிரேட்ஸ் குரூப் செக்யூரிட்டி (Emirates Group Security – EGS) மற்றும் எதிஹாட் ஏவியேசன் குரூப் (Etihad Aviation Group – EAG) ஆகிய இரண்டும், விமானப் பாதுகாப்பை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், தற்போது விமான நிறுவனங்கள் இரண்டாவது முறையாக இணைந்து இந்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தினாது, ஒவ்வொரு பயணிகளையும் துபாய் அல்லது அபுதாபிக்கு செல்ல ஒரு டிக்கெட்டை வாங்கவும், மற்றும் தடையின்றி மற்ற விமான நிலையம் வழியாக திரும்பவும் அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், முழுப் பயணத்திற்கான ஒரு நிறுத்தத்தில் டிக்கெட்டின் நெகிழ்வுத்தன்மையையும், பேக்கேஜ் செக்-இன் வசதியையும் எளிதாக அணுகுவதற்கு அனுமதிக்கும்.

அதாவது இந்த ஒப்பந்தத்தின் கீழ், அபுதாபிக்கு செல்ல இருக்கும் பயணிகள் துபாய் விமான நிலையம் வந்து பின்னர் அபுதாபிக்கு பயணிக்க வேண்டிய அவசியத்தை நீக்குவதன் மூலம் இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இதுபோல, ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பறக்கும் பயணிகளுக்கு ‘multi-city flights’ என்ற விருப்பமும், இரண்டு கேரியர்களின் நெட்வொர்க்குகளிலும் ஒரு நகரத்திலிருந்து பயணிக்கும் விருப்பமும் உள்ளது. மேலும், எமிரேட்ஸ் அல்லது எட்டிஹாட் சேவை செய்யும் மற்றொரு இடத்திற்கு வசதியாக பயணிக்கலாம்.

இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில், ஒவ்வொரு விமான நிறுவனமும் ஐரோப்பா மற்றும் சீனாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உள்வரும் இன்டர்லைன் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் அமீரகத்திற்கு பார்வையாளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரேபியன் டிராவல் மார்க்கெட்டில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் சர் டிம் கிளார்க் மற்றும் அன்டோனால்டோ நெவ்ஸ் ஆகியோர் முன்னிலையில் எமிரேட்ஸ் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி அட்னான் காசிம் மற்றும் எதிஹாட் ஏர்வேஸின் தலைமை இயக்க அதிகாரி முகமது அல் புலூக்கி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இது குறித்து கிளார்க் அவர்கள் கூறியதாவது: ” எத்திஹாட் ஏர்வேஸ் உடன் மீண்டும் பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறோம், இப்போது UAEக்கு உள்ளேயும் வெளியேயும் ஒவ்வொரு கேரியரும் தடையற்ற பயண விருப்பங்களை வழங்க அனுமதிக்கிறோம். எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஆகியவை எங்களது வாடிக்கையாளர் சலுகைகளை விரிவுபடுத்துவதற்கும், ஐக்கிய அரபு அமீரக சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் எங்கள் பலத்தைப் பயன்படுத்துகின்றன”.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கியப் பங்கு வகிக்கிறது, இது நாட்டின் மொத்த GDP-யில் 5.4 சதவீதம் அல்லது 116.1 பில்லியன் திர்ஹம் ($31.6 பில்லியன்) வரை பங்காற்றுகிறது. மேலும், 2027 க்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!