அமீரக செய்திகள்

துபாய்: நடைமுறைக்கு வந்துள்ள மொபைல் போர்டிங் பாஸ்..!! உங்கள் மொபைலில் சார்ஜ் இல்லையென்றால் என்ன செய்வது…??

ஐக்கிய அரபு அமீரகத்தில் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, எமிரேட்ஸ் நிறுவனம் மே 15 முதல் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) புறப்படும் பெரும்பாலான பயணிகள் பேப்பர் போர்டிங் பாஸுக்குப் பதிலாக மொபைல் போர்டிங் பாஸைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.

குறிப்பாக, இந்த மொபைல் போர்டிங் பாஸ் துபாயிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு ஒரே நேரத்தில் வசதியான மற்றும் விரைவான டிஜிட்டல் செக்-இன் அனுபவத்தை வழங்கும் அதே வேளையில், போர்டிங் பாஸ்கள் தொலைந்து போகும் அல்லது தவறாக கைபற்றப்படும் அபாயத்தையும் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து எமிரேட்ஸ் கூறுகையில், DXB-யின் டெர்மினல் 3ல் செக்-இன் செய்யும் பயணிகள் தங்கள் மொபைல் போர்டிங் பாஸை மின்னஞ்சல் அல்லது SMS மூலம் பெறுவார்கள். அதுபோல, ஆன்லைனில் செக்-இன் செய்யும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸை ஆப்பிள் வாலட் அல்லது கூகுள் வாலட்டில் டவுன்லோட் செய்யலாம் அல்லது அவர்களுக்கான எமிரேட்ஸ் ஆப் வழியாகப் பெறலாம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்த சந்தேகஙளுக்கான விளக்கங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை கீழே காணலாம்.

ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் என்ன செய்யலாம்?

உங்கள் போர்டிங் பாஸைக் காண்பிக்க உங்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாதபட்சத்தில், செக்-இன் கவுண்டர்களில் போர்டிங் பாஸை அச்சிடுவதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்படும். அதேசமயம், ஸ்மார்ட் போன் வைத்திருந்தும் எதிர்பாராதவிதமாக உங்கள் ஃபோன் செயலிழந்துவிட்டாலோ, அல்லது சிஸ்டம் செயலிழந்தாலோ, செய்தி வழங்குவதில் தாமதம், வைஃபை, நெட்வொர்க் அல்லது டேட்டா பேக்கேஜை அணுக இயலாமை போன்ற சிக்கலை அனுபவித்தால், அந்தசமயத்தில் உடனடியாக போர்டிங் பாஸை அச்சிட செக்-இன் கவுன்டர்களில் ஏர்லைன் ஏஜெண்டுகளை நீங்கள் கோரலாம்.

மொபைல் போர்டிங் பாஸை எவ்வாறு பயன்படுத்துவது?

விமான நிலைய டெர்மினலில் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து போர்டிங் பாஸைக் காட்டுங்கள். எமிரேட்ஸ் முகவர்களும் விமான நிலைய ஊழியர்களும் மொபைல் போர்டிங் பாஸில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வார்கள்.

DXB டெர்மினல் 3 இலிருந்து புறப்படும் அனைத்து எமிரேட்ஸ் பயணிகளும் மொபைல் போர்டிங் பாஸ் வைத்திருக்க வேண்டுமா?

பின்வரும் பயணிகளுக்கு மொபைல் போர்டிங் பாஸிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது – உதாரணமாக, கைக்குழந்தைகள், துணையில்லாத சிறார்களுடன் பயணம் செய்யும் போது, ​​சிறப்பு உதவி தேவைப்படும் பயணிகள், பிற விமான நிறுவனங்களில் வரும் விமானங்களில் பயணிப்பவர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு செல்லும் அனைத்து பயணிகளும் பேப்பர் போர்டிங் பாஸ் அச்சிடப்பட வேண்டியிருக்கலாம்.

இந்த பாஸை வேறு எங்கு பயன்படுத்தலாம்?

துபாயில் டூட்டி ஃப்ரீ மற்றும் பாதுகாப்பு சோதனையில் இந்த பாஸை நீங்கள் பயன்படுத்தலாம்.

டெர்மினல் 3 இல் ஸ்மார்ட் கேட்களை எவ்வாறு பயன்படுத்துவது?

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் விமான நிலையத்தின் டெர்மினல் 3 இல் உள்ள ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்த பதிவு செய்யலாம் மற்றும் அவர்கள் துபாய்க்கு திரும்பும் ஒவ்வொரு முறையும் குடியேற்ற செயல்முறையை விரைவுபடுத்தலாம். அதன்படி, குடியிருப்பாளர்கள் தங்கள் பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் அல்லது செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடியைப் பயன்படுத்தலாம், அதே நேரத்தில் GCC நாட்டினர் அல்லது வருகையின் போது விசாவிற்கு தகுதியான சுற்றுலாவாசிகள் பயோமெட்ரிக் பாஸ்போர்ட் மூலம் ஸ்மார்ட் கேட்ஸ் வழியாக செல்லலாம்.

மொபைல் போர்டிங் பாஸ் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?

மில்லியன் கணக்கான பயணிகள் ஏற்கனவே டிஜிட்டல் முறையில் இயக்கப்பட்ட பயணங்களின் நடைமுறைகளை அனுபவித்து வருகின்ற நிலையில், பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தடையற்ற பயண அனுபவத்தை அனுபவிக்கவும், Emirates inflight entertainment-இல் கிடைக்கும் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இசையின் பிளேலிஸ்ட்டைக் கையாள நேரத்தைச் செலவிடலாம் மற்றும் விமானத்தின் பயன்பாட்டைப் பயன்படுத்துபவர்கள் டிஜிட்டல் மெனுக்களை முன்கூட்டியே அணுகவும் இது வசதியானதாக இருக்கும் என்று எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!