அமீரக செய்திகள்

ஜூன் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலையை குறைத்த அமீரகம்..!! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் விலைக் குழு ஒவ்வொரு மாதத்திற்கும் எரிபொருள்களின் விலையில் மாற்றம் செய்து அமல்படுத்தி வரும் நிலையில், தற்போது எதிர்வரும் ஜூன் மாதத்திற்கான புதிய எரிபொருள் விலையை அறிவித்துள்ளது. புதிய விலைகள் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும்.

நாடு முழுவதும் பெட்ரோல் விலை ஏப்ரல் மாதத்தில் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து மே மாதத்தில் விலை உயர்ந்தது. ஏற்கனவே, மார்ச் மாதத்தில் எரிபொருள் விலை உயர்வைச் சந்தித்த நிலையில், இந்தாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விலை குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குழு வெளியிட்டுள்ள எரிபொருளின் புதிய விலைப் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  • ஜூன் 1 முதல் சூப்பர் 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.95 திர்ஹம்களாக இருக்கும், மே மாதத்தில் இது 3.16 திர்ஹம்களாக இருந்தது.
  • அதே போல் ஸ்பெஷல் 95 பெட்ரோல் விலை ஜூன் 1 முதல் லிட்டருக்கு 2.84 திர்ஹம்களாகும், இது கடந்த மாதம் 3.05 திர்ஹம்களாக இருந்தது.
  • மேலும் இ-பிளஸ் 91 பெட்ரோல் விலை ஜூன் மாதத்தில் லிட்டருக்கு 2.76 திர்ஹம்களாக இருக்கும், மே மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.97 திர்ஹம்களாக இருந்தது.
  • டீசல் கடந்த மாதம் 3.03 திர்ஹம்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஜூன் மாதம்  ஒரு லிட்டருக்கு 2.68 திர்ஹம்கள் விற்கப்படும்.

மேலும், எரிபொருளுக்கான சில்லறை விலைகள் லிட்டருக்கு 21 ஃபில்ஸும், டீசலுக்கு 35 ஃபில்ஸும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பை பெரும்பாலான குடியிருப்பாளர்கள் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!