அமீரக செய்திகள்

அமீரகத்தில் மூன்றாவது நாளாக தொடரும் மழை..!! வாகன ஓட்டிகளுக்கான வழிகாட்டுதல்களை நினைவூட்டிய RTA…!!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சனிக்கிழமை முதல் மழை பெய்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை (மே.22) காலையிலும் மழை பெய்துள்ளது. இன்று காலை துபாய், அபுதாபி, ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா ஆகிய எமிரேட்டுகளில் இலேசான மழை பெய்துள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நிலையற்ற வானிலையின் போது, பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடித்து வாகனம் ஓட்டுமாறு ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மழை நேரங்களில் பள்ளமான பகுதிகளில் கூடுவதைத் தவிர்க்கவும், வாகனங்களில் ஹெட்லைட்களைப் பயன்படுத்துவதன் மூலம் பொது பாதுகாப்பு அளவீடுகளை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

நிலையற்ற வானிலையில் ஓட்டுவதற்கான துபாய் RTAயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்:

>> பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு ஒருமுறையாவது உங்கள் வாகனத்தின் பிரேக்குகள், டயர்கள் மற்றும் ஹெட்லைட்களை சரிபார்க்கவும்.

>> உங்கள் பயணம் சிறியதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மழையில் வாகனம் ஓட்டுவதற்கு முன், உங்கள் வைப்பர்கள் நன்றாக வேலை செய்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது பாதுகாப்பான பயணத்திற்கு நல்லது.

>> அத்துடன் மழையில் வாகனம் ஓட்டும் போது, உங்களுக்கும் முன்னால் செல்லும் வாகனத்திற்கும் இடையில் பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்கவும்.

>> மேலும், மழை பெய்யும்போது, மெதுவாக வாகனத்தை ஓட்டுவது சிறந்தது, ஏனெனில் உங்கள் வாகனத்தை மற்ற வாகனங்களுக்குப் பின்னால் திடீரென நிறுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் கவலைப்படத் தேவையில்லை.

>> குறிப்பாக, நிலையற்ற காலநிலையில் உங்கள் வாகனங்களின் டயர்களை சரிபார்க்க வேண்டும்.

>> எப்போதும், சாலைகளில் உள்ள போக்குவரத்து அடையாளங்களை பின்பற்றுவதுடன் வழுக்கும் சாலைகளில் கட்டுப்பாட்டை இழப்பதைத் தவிர்க்க, டிராஃபிக் லைட் பச்சை நிறமாக மாறும்போது, ​​உடனடியாக ஆக்ஸிலரேட்டரை அழுத்த வேண்டாம்.

>> மழைநேரங்களில் எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டும் போது, சாலைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வேக வரம்பை மீற வேண்டாம்.

>> ஓட்டுநர்களுக்கான அறிவுரை:

  1. மற்ற வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை கடைபிடியுங்கள்.
  2. அவசர நிலையைத் தவிர மற்ற வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாம்.

>> மழை நேரங்களில்  உங்கள் ஹெட்லைட்களை இயக்கி, மோதலைத் தவிர்க்க உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்திற்கு இடையே பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றவும்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓரளவு மேகமூட்டமான வானம் தூசியுடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. அதேசமயம், வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!