அமீரக செய்திகள்

ஜூன் மாதம் திறக்கப்படவுள்ள அமீரகத்தின் மிகப்பெரிய உட்புற பனிப்பூங்கா ‘Snow Abudhabi’..!! – அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்..!!

உலகின் மிகப்பெரிய உட்புற பனிப் பூங்காக்களில் ஒன்றாக, அபுதாபியின் ரீம் மாலில் (Reem Mall) கட்டப்பட்டிருக்கும் ‘ஸ்னோ அபுதாபி (Snow Abu Dhabi)’ எதிர்வரும் ஜூன் 8 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் மாஜித் அல் ஃபுத்தைம் மூலம் இயக்கப்படும் மால் ஆஃப் தி எமிரேட்ஸில் அமைந்துள்ள Ski Dubai ஐ விடவும் பெரியதாக கட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்னோ அபுதாபி, பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் ஐஸ் பார்க், அட்வென்ச்சர் ரைடுகள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் திறக்கப்படவுள்ளது.

கிட்டத்தட்ட 1,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு  -2ºC வெப்பநிலையை பராமரிக்கும் உட்புற பூங்காவில் 12 ரைடுகள் மற்றும் பொழுதுபோக்குவதற்காக 17 இடங்கள் உள்ளன. இதன் முக்கிய ஈர்ப்புகளில் ஐஸ் மற்றும் ஃப்ளோஸ் டோபோகன் ரேஸ் (Ice & Floes Toboggan Race) மற்றும் கிராப்பலின் சம்மிட் எஸ்கேப் (Grauppel’s Summit Escape) எனப்படும் இரண்டு பெரிய ஸ்லைடுகளும் அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதுபோல, ஸ்னோ அபுதாபியில் கிரியேட்டிவாக பெயரிடப்பட்ட ரைடுகளில் தி என்ட்ரி பிளாசா, ஃப்ளைட் ஆஃப் தி ஸ்னோவி ஆவ்ல், மேஜிக் கார்பெட், போலார் எக்ஸ்பிரஸ் ட்ரெய்ன் மற்றும் கிரிஸ்டல் கொரோசல் ஆகியவையும் அடங்கும். இவற்றுடன் தி லாட்ஜ் ரெஸ்டாரன்ட், ஐஸ் கஃபே மற்றும் க்ரோட்டோ ஆம்பிதியேட்டர் உள்ளிட்ட உணவகங்களும் பார்வையாளர்களுக்காக  திறந்திருக்கும் என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தவிர, கடந்த பிப்ரவரி 16ம் தேதி அன்று திறக்கப்பட்ட ரீம் மாலில் பார்வையாளர்கள் ஷாப்பிங் செய்வதற்கு வசதியாக டிம்பர்லேண்ட், தி நார்த் ஃபேஸ், மேக்ஸ், வேன்கள் மற்றும் கேரிஃபோர் ஹைப்பர் மார்க்கெட் உட்பட சுமார் 400 கடைகளும், சினிமா பிரியர்களுக்காக வோக்ஸ் சினிமாஸும் (Vox Cinemas) இங்கே அமைந்துள்ளது.

அதுபோன்று உணவுப்பிரியர்களுக்காக எண்ணற்ற விருப்பங்களை வழங்கும் பல்வேறு உணவகங்கள் மற்றும் கஃபேக்களுடன் ஃபுட் கோர்ட் வசதியும், பார்வையாளர்களின் வசதிக்காக 6,800 இடங்கள் கொண்ட கார் பார்க்கிங் வசதியும் ரீம் மாலில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!