ADVERTISEMENT

UAE: இரு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் தீபிடித்து விபத்து..!! லாரியை ஓட்டி வந்த ஆசிய நாட்டவர் உயிரிழப்பு..!!

Published: 2 May 2023, 5:14 PM |
Updated: 2 May 2023, 6:10 PM |
Posted By: Menaka

ராஸ் அல் கைமாவில் நேற்று (மே.1) நடைபெற்ற லாரி விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், உயிரிழந்தவர் ஆசிய நாட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

ஊடகங்களில் வெளியான செய்திகளின் படி, சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரண்டும் தீப்பிடித்து எரிந்துள்ளன எனவும் இந்த விபத்தின் போது லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ராஸ் அல் கைமாவின் சிவில் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினரை ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.

ADVERTISEMENT

விரைந்து சென்ற சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் விபத்தினால் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர். அதேசமயம், விபத்தில் உயிரிழந்த ஆசிய நாட்டைச் சேர்ந்த ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT