அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று வெப்பநிலை 46ºC ஆக உயரும்..!! தூசி, மணலுடன் காற்று வீச வாய்ப்பு..!! NCM தகவல்…!!

இன்றைய தினம் ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

NCM அறிவிப்பின்படி, மேகங்கள் தெற்குநோக்கி நகரும். மேலும், சில சமயங்களில் லேசான முதல் மிதமான காற்று வீசி புத்துணர்ச்சியூட்டுவதுடன் தூசி மற்றும் மணலுடன் கூடிய புழுதிக் காற்றும் வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதேசமயம் அதிகபட்சமாக, அபுதாபியில் 43ºC ஆகவும், துபாயில் 41ºC ஆகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், குறைந்த பட்சமாக அபுதாபியில் 30ºC ஆகவும், துபாயில் 29ºC ஆகவும், மலைப்பகுதிகளில் 22ºC ஆகவும் வெப்பநிலை பதிவாகும். மேலும் அபுதாபி மற்றும் துபாயில் காற்றில் ஈர்ப்பதம் 15 முதல் 75 சதவீதம் வரை இருக்கும்.

அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடலில் சில சமயங்களில் கடலின் அலை வேகம் சற்று மிதமானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!