அமீரக செய்திகள்

அமீரகம் எவ்வளவு பாதுகாப்பானது என்பதற்கு இந்த வைரல் வீடியோதான் சான்று!! எவ்வித பாதுகாப்புமின்றி தெருவில் நடந்து சென்ற அமீரக அதிபர்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், அவரது பணிவான இயல்பு மற்றும் நியாயமான குணத்திற்காக நாட்டின் குடியிருப்பாளர்களிடையே நன்கு அறியப்பட்டவர். மேலும், பிற தலைவர்கள் மற்றும் அமீரக மக்கள் ஆகியோருடன் ஒரு அற்புதமான உறவைப் பாதுகாத்து வருவதுடன், பல சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட முறையில் குடியிருப்பாளர்களை அழைத்து அவர்களைப் பாராட்டியிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் எவ்வித பாதுகாப்புமின்றி சாலையில் நடந்து சென்ற வீடியோவானது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோவில் அமீரக அதிபர் காவலர்கள், சாலை கட்டுப்பாடுகள் அல்லது நெறிமுறைகள் போன்ற எவ்வித பாதுகாப்புமின்றி சாதாரண மக்களைப் போல தெருவில் நடப்பதைக் காணலாம். இத்தகைய அவரது எளிமையான நடத்தை மூலம் அவர் மீண்டும் மக்கள் மனதை வென்றுள்ளார்.

இந்த வீடியோவில் குடியிருப்பாளர்களைப் போன்றே சாதாரணமாகத் தெருவில் உலா வருகையில், அந்த அற்புதமான காட்சியைக் கண்டது மட்டுமின்றி, படம் பிடித்த குடியிருப்பாளரான ஹசன் சஜ்வானி இது பற்றி கூறுகையில் தனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று கூறலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட சஜ்வாணி, “No guards, no protocols, no roadblocks” என்ற தனித்துவமான கேப்ஷனுடன் “ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் முகமது பின் சையத் அவர்கள் பொதுமக்கள் போல ஒரு தெருவில் நடந்து செல்கிறார் … இது ஐக்கிய அரபு அமீரகம் எவ்வளவு பாதுகாப்பானது … எனது ஜனாதிபதி எவ்வளவு அடக்கமானவர் என்பதை உணர்த்துகிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதனைத் தொடர்ந்து எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளுமின்றி எளிமையாக தெருவில் உலா வரும் ஜனாதிபதியின் வீடியோவைப் பார்த்த பிற ட்விட்டர் பயனர்கள் அனைவரும் கருத்துக்களில் இதேபோன்ற பாராட்டு உணர்வுகளை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!