அமீரக செய்திகள்

அபுதாபி: எலக்ட்ரிக் வாகனங்கள் உரிமம் பெறுவதற்கு 2 புதிய பாதைகள் திறப்பு!!

அபுதாபியில் எலக்ட்ரிக் வாகனங்களின் (EVs) பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அபுதாபியில் இந்த வாகனங்களின் உரிமம் பெறுவதற்காக மின்சார வாகனங்களை சோதிக்கும் புதிய பாதைகள் தற்பொழுது திறக்கப்பட்டுள்ளன.

அபுதாபி காவல்துறையானது, ADNOC விநியோக நிறுவனத்துடன் இணைந்து, எலக்ட்ரிக் வாகனங்களை சோதிக்க முரூர் பகுதியில் உள்ள ADNOC வாகன ஆய்வு மையத்திலும், அல் அய்னில் அல் பதீனில் உள்ள வாகன ஆய்வு மையத்திலும் இரண்டு பாதைகளைத் திறந்துள்ளது.

இந்த புதிய செயல்முறையானது, மின்சார கார்களின் உரிமையாளர்களுக்கு அவர்களின் வாகனங்களை இந்த சிறப்பாக தயாரிக்கப்பட்ட பாதைகள் மூலம் பரிசோதிப்பதில் முன்னுரிமை அளிக்கும் நோக்கத்துடன் சேவை செய்வதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய செயல்பாட்டுத் துறையின் ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிம இயக்குநரகத்தின் இயக்குநர் பிரிகேடியர் ஜெனரல் முஹம்மது அல் புரைக் அல் அமிரி அவர்கள் கூறுகையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், இரு தரப்புக்கும் இடையே விரும்பிய மற்றும் பொதுவான இலக்குகளை அடைவதற்கு இரண்டு பாதைகள் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அபுதாபி காவல்துறை ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிம இயக்குநரகம், அதன் மூலோபாய கூட்டாளியான ADNOC விநியோகத்துடன் இணைந்து, இரு தரப்புக்கும் இடையே கூட்டுப் பணி முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளின் தொகுப்பிற்குள் சிறப்பான மற்றும் விதிவிலக்கான சேவைகளை வழங்க முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு தற்பொழுது வாகன உரிமங்களுக்காக சோதனையை மேற்கொள்ளவிருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்த பாதைகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!