அமீரக செய்திகள்

அடுத்த வாரம் துவங்கவுள்ள ‘துபாய் சம்மர் சர்ப்ரைஸ்’… மிஸ் பண்ண கூடாத முக்கிய நிகழ்வுகள்..!!

ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் துபாய் குடியிருப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘துபாய் சம்மர் சர்ப்ரைஸ் (Dubai Summer Surprise – DSS)’ இந்தாண்டு அதன் 26வது பதிப்பில் அதிரடி விற்பனை மற்றும் மெகா பொழுதுபோக்கு சலுகைகளுடன் அடியெடுத்து வைக்க உள்ளது. சுமார் 67 நாட்கள் கண்கவர் வானவேடிக்கை மற்றும் அதிரடி தள்ளுபடிகளுடன் களைகட்டும் DSSஐ துபாய் ஃபெஸ்டிவல்ஸ் மற்றும் ரீடெயில் எஸ்டாப்ளிஷ்மென்ட் (DFRE) நிறுவனம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வருகிறது.

துபாய் பெஸ்டிவல் மற்றும் ரீடெயில் எஸ்டாப்ளிஷ்மென்ட் நிறுவனத்தால் (DFRE) ஏற்பாடு செய்யப்பட்ட DSSஇன் 26வது சீசன் எதிர்வரும் ஜூன் 29 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டுக்கான DSS நிகழ்வுகளின் முழு காலண்டர் ஜூன் 20 அன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்வானது, குடியிருப்பாளர்களையும் பார்வையாளர்களையும் பிரமிக்க வைக்கும் வகையில் பொழுதுபோக்கு, நிகழ்வுகள் மற்றும் கச்சேரிகள் என ஒரு உற்சாகமான சீசனை உறுதியளிக்கிறது.

மேலும், இந்தாண்டு ஈத் அல் அதா விடுமுறையுடன் DSSஇன் தொடக்க வாரமானது ஒத்துப்போகிறது. இதனையொட்டி, இந்த விடுமுறை நாட்களில் கிடைக்கப்பெறும் சலுகைகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

1. 75% வரை தள்ளுபடி:

இந்தாண்டு DSS சீசனில் ஆயிரக்கணக்கான விற்பனை நிலையங்கள் 75 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்க உள்ளதாக DFRE தெரிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச மற்றும் உள்ளூர் பிராண்டுகள் பலவிதமான சலுகைகள் மற்றும் வாராந்திர ரீடெய்ல் ப்ரோமொஷன்களை வழங்கும். எனவே, பார்வையாளர்கள் DSS இல் ஃபிளாஷ் விற்பனை மற்றும் தனித்துவமான ப்ரொமோஷன்களை காணலாம்.

2. வாழ்க்கையை மாற்றும் ராஃபிள் பரிசுகள்:

DSS இன் ஷாப்பிங் நிகழ்வில் தொடர்ச்சியான ரேஃபிள்கள் மற்றும் போட்டிகள் நடத்தப்படும். இதில் பங்குபெறும் மால்கள், ரொக்கப் பணம் முதல் கார்கள் மற்றும் தங்கம் வரை அனைத்தையும் வெல்லும் வாய்ப்பை ஷாப்பிங் செய்பவர்களுக்கு வழங்கும். மேலும், இந்தாண்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 20 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. தங்கும் விடுதிகளில் சலுகைகள்:

DSS இன் போது, தங்கும் விடுதிகளில் ஏராளமான சிறப்பு கட்டணங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, பெரும்பாலான ஹோட்டல்கள் மற்றும் இடங்களில் குழந்தைகள் இலவசச் சலுகைகளைப் பெறுவார்கள், அதே நேரத்தில் அமீரக குடியிருப்பாளர்களுக்கும் சிறப்புச் சலுகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சிறப்பு விலையில் ஃபைன் டைனிங்:

துபாயின் சிறந்த உணவகங்களில் DSS இன் போது, சிக்னேச்சர் உணவுகளின் மெனுக்களை சிறந்த விலையில் ருசிக்கலாம். எனவே, உணவுப் பிரியர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!