அமீரக செய்திகள்

அபுதாபியில் எட்டு இடங்களில் பிக் ஜீரோ நிறுவல்கள்..!! சுற்றுச்சூழலை பாதுகாக்க வேற லெவல் திட்டம்..!!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் முறையை குடியிருப்பாளர்களிடையே கொண்டுவரும் நோக்கில், அபுதாபியில் எட்டு வெவ்வேறு இடங்களில் ‘Big zero’ என்ற மறுசுழற்சி சேமிப்பு அமைப்பை நிறுவ அபுதாபியானது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு Abu Dhabi Hunting and Equestrian Exhibitionஇன் (ADIHEX) ‘பிக் ஜீரோ’ நிறுவல்கள் முதன்முதலில் அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சியால் (Environment Agency – Abu Dhabi EAD) அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, EAD ஆனது அல்தார் பிராப்பர்டீஸுடன் (Aldar Properties) கைகோர்த்துள்ளது. இது அபுதாபி குடியிருப்பாளர்கள் எளிதாக பிளாஸ்டிக் பாட்டில்களை அப்புறப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த கூட்டாண்மை குறித்து அல்தாரின் நிலைத்தன்மை மற்றும் CSR இன் இயக்குனர் சல்வா அல் மாப்லஹி என்பவர் கூறுகையில், அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சியுடனான பார்ட்னர்ஷிப் அமீரகத்தின் வளமான பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அபுதாபி முழுவதும் அல்தாரின் குடியிருப்பு மற்றும் வணிகச் சொத்துக்கள் இருப்பதால் பிக் ஜீரோ மற்றும் EAD இன் மிஷன் டு ஜீரோ திட்டம் ஆகிய இரண்டிலும் முக்கிய பங்காற்ற முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் அல்தார் போர்ட்ஃபோலியோவில் உள்ள எட்டு இடங்களில் பிக் ஜீரோ நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, அபுதாபியின் மிகப்பெரிய ஷாப்பிங் வளாகமான யாஸ் மால் உட்பட ரீம் ஐலேண்டில் உள்ள கேட் மற்றும் ஆர்க் டவர்ஸ், அல் முனீரா, அல் ஜீனா மற்றும் யாஸ் ஏக்கர்ஸ் போன்ற பல அல்தார் குடியிருப்பு சமூகங்களிலும், அல்தார் கல்வியின் அல் யாஸ்மினா, அல் பதீன் மற்றும் அல் மமோரா அகாடமி போன்ற இடங்களில் இந்த நிறுவல்கள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் EAD மற்றும் Aldar ஆகியவை சமூக ஊடகங்களில் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளன. இது குறித்து EAD இன் சுற்றுச்சூழல் தகவல், அறிவியல் அவுட்ரீச் மேலாண்மைத் துறையின் நிர்வாக இயக்குநர் அகமது பஹாரூன் என்பவர் கூறுகையில், அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சியின் தனியார் துறையுடனான பார்ட்னர்ஷிப் மிகவும் பலனளிக்கும் என்றும், பல சுற்றுச்சூழல் பிரச்சாரங்கள் மகத்தான வெற்றியை பெற்றுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, சுற்றுச்சூழல் ஏஜென்சியின் ‘ Mission to Zero’ பிரச்சாரத்தின் மூலம் அல்தார் நிறுவனத்தின் திட்டங்களுக்குள் உள்ள இடங்களில் பிக் ஜீரோ அமைப்பை நிறுவுவதற்கு அல்தார் மிகவும் ஆர்வத்துடன் ஆதரவளித்து வருவதாகக் கூறப்படுகிறது. சேகரிக்கப்படும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களை அல்தார் நிறுவனமே மறுசுழற்சிக்கு அனுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!