அமீரக செய்திகள்

துபாய், அபுதாபியில் ‘ஈத் அல் அதா’ வானவேடிக்கை நடைபெறும் இடங்களும் நேரமும்…. குடும்பங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிட சிறந்த இலக்கு…

ஈத் அல் அதா விடுமுறையில் ஏராளமான பொழுதுபோக்கு நிகழ்வுகள், பல்வேறு சுவையான உணவுகள் மற்றும் கண்கவர் காட்சிகள் என இடைவிடாது நேரத்தை அனுபவிக்க அமீரக குடியிருப்பாளர்களில் சிலர் வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

மேலும், இது அமீரகத்தில் இந்தாண்டின் இரண்டாவது மிகப்பெரிய நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களாக இருக்கும். அதற்காக நாட்டிற்குள்ளேயே இருப்பவர்கள் இந்த விடுமுறையில் குறைந்த அளவிலான பொழுதுபோக்கு நிகழ்வுகளைக் காணவேண்டும் என்று அர்த்தமில்லை.

ஏனெனில், அமீரகத்தில் ஈத் அல் அதாவைக் கொண்டாடும் குடியிருப்பாளர்களுக்கு ஏராளமான கண்கவர் கொண்டாட்டங்களும், சாகச அனுபவங்களும் காத்திருக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்வேறு தெருக்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் மால்கள் என அனைத்தும் வண்ண விளக்குகள் மற்றும் ஜொலிக்கும் அலங்காரங்களுடன் தியாகத் திருநாளான ஈத் அல் அதாவை வரவேற்கும். கூடவே, எக்கச்சக்கமான விற்பனைச் சலுகைகளும் வழங்கப்படும்.

எனவே, நாட்டிற்குள்ளேயே குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இந்த விடுமுறையைக் கொண்டாடத் திட்டமிடுபவர்களாக இருந்தால், பின்வரும் வானவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் கூடிய முக்கிய ஈர்ப்புகளைப் பார்வையிடத் தவறாதீர்கள்:

துபாய் பார்க் & ரிசார்ட்ஸ்:

துபாயில் உள்ள இந்த மெகா தீம் பார்க்கில் ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை தொடர்ச்சியாக ஐந்து நாள் இரவுகளிலும் கண்கவர் வானவேடிக்கை மற்றும் பட்டாசு நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே, இரவு 9 மணியளவில் துபாய் பார்க்ஸில் பார்வையாளர்கள் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம். இதற்கு முன்பு, இரவு 8 மணிக்கு, ரிவர்லேண்டில் டினோ மேனியா அணிவகுப்பையும் இங்கு காணலாம்.

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால்:

புனித ஈத் அல் அத்தாவின் இரண்டாவது இரவில் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டியின் உலகத் தரம் வாய்ந்த வாட்டர்பிரன்ட் (waterfront) காண்போரை ஈர்க்கும் வகையில் விளக்குகளால் ஒளிரூட்டப்படும். மேலும் இங்கு வியப்பூட்டும் வானவேடிக்கைக் கண்காட்சியைத் தவிர, மால் செல்லும் குடியிருப்பாளர்கள் அதிவேக லேசர், ஒளி மற்றும் வாட்டர் மல்டி சென்ஸாரி நடனம் ஆகியவற்றையும் பெஸ்டிவல் பே பகுதியில் கண்டு ரசிக்கலாம்.

யாஸ் பே அபுதாபி:

ஜூன் 28 முதல் ஜூன் 30 வரை மூன்று இரவுகளும் யாஸ் பே அபுதாபியில் வானம் பட்டாசுகளால் ஒளிர்வதைக் கண்டு ரசிக்கலாம். இது குடும்பங்களுக்கு ஏற்ற சிறந்த பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும். இரவு 9 மணி முதல் 9.10 மணி வரை தொடர்ச்சியாக 10 நிமிட வானவேடிக்கை நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுதைரியாத் ஐலேண்ட்:

அபுதாபியின் பிரபல ஈர்ப்புகளில் ஒன்றான ஹுதைரியாத் ஐலேண்டில் உள்ள மர்சானாவில் ஜூன் 29 அன்று இரவு 9 மணிக்கு வானவேடிக்கையின் வண்ணமயமான காட்சிகளைக் காணலாம். அத்துடன் உணவுப்பிரியர்களுக்கென 5 சிட் டவுன் உணவகங்கள் மற்றும் நான்கு உணவு டிரக்குகளும் இங்கு உள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!