அமீரக செய்திகள்

UAE: காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து தடையின் மீது மோதி விபத்து…!! வாகன ஓட்டிகளை எச்சரித்த அபுதாபி காவல்துறை..!!

ஒவ்வொரு முறை வீட்டிலிருந்து புறப்படும்போதும், தனது வாகனத்தை ஒருமுறை பரிசோதித்து விட்டு பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்தும் விதமாக, அபுதாபி காவல்துறை தேய்ந்த டயர்களுடன் வாகனத்தை ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது.

அபுதாபி காவல்துறை பகிர்ந்துள்ள வீடியோ காட்சியில், ஒரு வெள்ளை நிற sedan வகை காரின் பின்புற டயர்களில் ஒன்று வெடித்ததில், சாலையின் இடது பக்கத்தில் உள்ள கான்கிரீட் தடையில் கார் மோதி விபத்துக்குள்ளாகியதைக் காணலாம். இப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் ஐந்து வழிச்சாலையின் குறுக்கே சென்று, வலதுபுறத்தில் உள்ள வேலியில் மோதியதையும் வீடியோவில் காணமுடிகிறது.

வீடியோ காட்சிகளின் படி, அதே சாலையில் சென்று கொண்டிருந்த மற்ற எந்த வாகனங்களுக்கும் பெரிய விபத்து எதுவும் நடக்கவில்லை. ஆனால், கார் தடையின் மீது மோதிய அதேசமயத்தில், ஒரு பள்ளி பேருந்து உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இது எளிதில் பயங்கரமான பல வாகன விபத்தாக மாறியிருக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


ஆகவே, கோடை வெப்பம் உச்சத்தைத் தொடும் போது, வாகன ஓட்டிகள் தங்கள் டயர்களின் நிலையை எப்பொழுதும் பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தை வீடியோ காட்சிகளின் மூலம் காவல்துறை நினைவூட்டியுள்ளது.

அதுமட்டுமின்றி, பழுதடைந்த அல்லது தேய்ந்து போன டயர்களுடன் வாகனத்தை ஓட்டினால் 500 திர்ஹம் அபராதமும், 4 பிளாக் பாயிண்டுகளும் விதிக்கப்படும். மேலும், ஒரு வாரத்திற்கு வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடிய குற்றம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் திறன், தாங்கக்கூடிய வெப்பநிலை மற்றும் அவை நீண்ட சாலைப் பயணங்களுக்கு ஏற்றதா என்பதைப் பரிசோதித்து விட்டு புறப்படுவது தன்நலன் மற்றும் பிறர் நலனுக்கு பாதுகாப்பானதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!