ADVERTISEMENT

உலகின் சிறந்த அனுபவங்களில் துபாயின் ‘Desert Safari’ நம்பர் ஒன்… வெளியான பட்டியல்..!!

Published: 2 Jul 2023, 8:17 PM |
Updated: 2 Jul 2023, 8:33 PM |
Posted By: Menaka

உலகின் மிகச் சிறந்த அனுபவங்களின் முதன்மையான பட்டியலில் துபாயின் பாலைவன சாகசம் (desert adventure) உள்ளதாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

பிரபல டிராவல் ஏஜென்சி நிறுவனமான ட்ரிப் அட்வைசர், உலகின் சிறந்த அனுபவங்களுக்கான அதன் பட்டியலில் துபாயின் பாலைவன சாகசத்தை சிறந்த நடவடிக்கையாக தரவரிசைப்படுத்தியதாகத் துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சாகச அனுபவங்களில் ஈடுபட விரும்பும் ஆர்வலர்களுக்கு, உலகின் சிறந்த அனுபவங்களின் பட்டியலில் முதன்மையான துபாயின் பாலைவன சாகசத்தை டிரிப் அட்வைசர் வழங்குகிறது. இது பாலைவனத்தின் மையத்தில் மறக்க முடியாத சாகச பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் இங்கு மனதைக் கவரும் லஹ்பாப் குன்றுகளில் ஆறு மணிநேரப் பயணம், எஸ்கேப் டூன்-பாஷிங் (dune-bashing), குவாட் பைக்கிங் (quad biking)ஒட்டகச் சவாரி (camel rides), சாண்ட்போர்டிங் (sand-boarding), ஸ்டார்கேஸிங் (stargazing) மற்றும் ஒரு இனிமையான பாரம்பரிய அரேபிய பார்பிக்யூ போன்றவற்றை அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.