அமீரக செய்திகள்

துபாய்: 6 மாதங்களில் மட்டும் பொதுப்போக்குவரத்தில் 330 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயணம்..!! மெட்ரோவில் மட்டுமே அதிகம் பேர் பயணித்ததாகவும் தகவல்…!!

துபாயில் இந்தாண்டின் முதல் பாதியில் கிட்டத்தட்ட 337 மில்லியன் பயணிகள் RTA இன் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியுள்ளதாகத் தரவுகள் வெளியாகியுள்ளன. அதாவது, தினசரி சுமார் 1.86 மில்லியன் பயணிகள் துபாய் மெட்ரோ, துபாய் டிராம், பொதுப் பேருந்துகள், கடல் போக்குவரத்து முறைகள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து முறைகளில் பயணித்துள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் பதிவான 304.6 மில்லியன் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டின் முதல்பாதி எண்ணிக்கை அதிகமாகும். இதனடிப்படையில் இந்த வருடம் சுமார் 11 சதவிகிதம் அதிகரிப்பைக் கண்டுள்ளது என்று RTAஇன் தலைவர் மேட்டர் அல் தாயர் கூறியுள்ளார்.

மேலும், இந்த புள்ளிவிவரங்கள் துபாய் பொருளாதார வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க குறிகாட்டி என்றும், RTA இன் பயனுள்ள முயற்சிகளுக்குக் கிடைத்த ஒரு சான்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, பயணிகளின் அதிகரிப்பானது, துபாயின் ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து நெட்வொர்க் இப்போது துபாயைச் சுற்றியுள்ள மக்களின் இயக்கத்தின் முதுகெலும்பாக மாறியிருப்பதைக் குறிப்பதாகவும் அவர் கூறினார்.

வெளியான புள்ளிவிவரங்கள்:

புள்ளிவிவரங்களின் படி, பெரும்பாலான பயணிகள் துபாய் மெட்ரோ மற்றும் டாக்ஸிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அதாவது, துபாய் பொதுப் போக்குவரத்தில், துபாய் மெட்ரோ 36.5 சதவீதமும், துபாய் டாக்ஸி 29 சதவீதமும் பங்களித்துள்ளன. மேலும், பொதுப் பேருந்துகள் 24.5 சதவீத பங்களிப்பை அளித்துள்ளன.

அத்துடன் இந்த அரையாண்டிலேயே மார்ச் 2023 மிகவும் பரபரப்பாக இருந்தது என்று கூறப்படுகிறது. ஏனெனில், சுமார் 60 மில்லியன் பயணிகள் இந்த மாதத்தில் பயணித்துள்ளனர். அதே நேரத்தில் மற்ற மாதங்களில் பயணிகள் போக்குவரத்து 53 முதல் 58 மில்லியன் வரை பதிவாகியுள்ளது.

துபாய் மெட்ரோ: இந்த அரையாண்டில் துபாய் மெட்ரோவின் ரெட் லைன் மற்றும் க்ரீன் லைன் இரண்டிலும் 123.4 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். இரண்டு லைனிலும் 7.25 மில்லியன் பயணிகள் புர்ஜுமன் நிலையத்தையும், 5.6 மில்லியன் பேர் யூனியன் ஸ்டேஷனையும் பயன்படுத்தியுள்ளனர்.

ரெட் லைன் :

  • அல் ரிக்கா-5.4 மில்லியன்
  • மால் ஆஃப் தி எமிரேட்ஸ் ஸ்டேஷன்- 5.2 மில்லியன்
  • புர்ஜ் கலீஃபா/துபாய் மால் ஸ்டேஷன்-4.7 மில்லியன்

க்ரீன் லைன்:

ஷரஃப் DG ஸ்டேஷன் 4.4 மில்லியன் (க்ளாக்கிங் அடிப்படையில் முதல் இடம்)

  • பனியாஸ் ஸ்டேஷன்-3.8 மில்லியன்
  • ஸ்டேடியம் ஸ்டேஷன்-3 மில்லியன்

துபாய் டிராம்: இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில், சுமார் 4.2 மில்லியன் பயணிகள் துபாய் டிராமில் பயணித்துள்ளனர்.

பொதுப் பேருந்துகள் : ஏறத்தாழ 83 மில்லியன் பயணிகள் பொதுப்பேருந்துகளில் பயணித்துள்ளனர்.

கடல் போக்குவரத்து: (ஆப்ரா, வாட்டர் பஸ், வாட்டர் டாக்ஸி மற்றும் ஃபெர்ரி) – இது போன்ற நீர்வழிப் போக்குவரத்து வசதிகளில் சுமார் 9.1 மில்லியன் பயணிகள் ஏறிச் சென்றுள்ளனர்.

இ-ஹெய்ல், ஸ்மார்ட் ரெண்டல் வாகனங்கள் மற்றும் பஸ்-ஆன்-டிமாண்ட் (Shared mobility): இவற்றில் 21 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர்.

டாக்ஸி: டாக்ஸிகள் சுமார் 96.2 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன.

இதற்கிடையில், RTAவின் மூலோபாய மற்றும் நிர்வாகத் திட்டங்கள் மூலம், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதுடன் குடியிருப்பாளர்கள் அவர்களது சொந்த அல்லது தனியார் வாகனங்களில் அடிக்கடி பயணிப்பதைக் கட்டுப்படுத்தி, பொது மற்றும் பகிரப்பட்ட போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவதை மேம்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!