ADVERTISEMENT

துபாயின் சில முக்கிய சாலைகளில் இன்றும், நாளையும் போக்குவரத்தில் தாமதம் ஏற்படும்.. RTA ட்வீட்..!!

Published: 1 Jul 2023, 12:00 PM |
Updated: 1 Jul 2023, 12:10 PM |
Posted By: Menaka

துபாயின் முக்கிய பகுதிகளான துபாய் வேர்ல்டு சென்டர், புர்ஜ் கலிஃபா ஆகிய இடங்களை சுற்றியுள்ள சில முக்கிய சாலைகளில் இன்றும் நாளையும் (சனி மற்றும் ஞாயிறு) போக்குவரத்தில் தாமதம் ஏற்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து RTA செய்த ட்வீட்டின்படி, ஜூலை 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் இரவு 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அல் சஃபா ஸ்ட்ரீட், ஹேப்பினஸ் ஸ்ட்ரீட் மற்றும் அல் பதா ஸ்ட்ரீட்டில் போக்குவரத்து தாமதம் ஏற்படும் என்று கூறியுள்ளது.

ஆகவே, வாகன ஓட்டிகள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, சேரவேண்டிய இலக்கை அடைய சீக்கிரமாக புறப்படுமாறு ஆணையம் வலியுறத்தியுள்ளது. அதேசமயம், மாற்றுவழிகளைப் பயன்படுத்துவதன் மூலம், போக்குவரத்துத் தாமதத்தைத் தவிர்க்கலாம் என்றும் குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளின் காரணமாக இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், இதனால் இந்த பகுதிகளில் காலதாமதம் ஏற்படும் என்றும் RTA தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.