அமீரக செய்திகள்

அமீரக குடியிருப்பாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அடுத்து வரவிருக்கும் தொடர் பொதுவிடுமுறை..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு இந்தாண்டின் மீதமுள்ள 4 மாதங்களில் 5  பொது விடுமுறைகளைக் கொண்டாட உள்ளனர். தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை முடிவடைவதால், பலர் அடுத்த பொது விடுமுறையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதன்படி, இந்த ஆண்டு மீதமுள்ள மூன்று அதிகாரப்பூர்வ பொது விடுமுறையில் முதலாவதாக அக்டோபர் 8 அன்று முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் உள்ளது.

அமீரகம் தனது 51 வது தேசிய தினத்தை டிசம்பர் 1,2,3 அன்று கொண்டாட உள்ளது. துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா, உம் அல் குவைன் ஆகிய ஏழு எமிரேட்களும் ஒன்றாக இணைந்து அமீரகமாக மாறிய தினத்தை நினைவு கூறும் விதமாக தேசிய தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 நாட்களுக்கு குடியிருப்பாளர்கள் விடுமுறையை அனுபவிக்கலாம். இந்த விடுமுறை நாட்களில் அமீரகம் முழுவதும் வான வேடிக்கை, ராணுவ அணி வகுப்புகள் என பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!