அமீரக செய்திகள்

அமீரகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள்… இங்கு மட்டும் பார்க்கிங் இலவசம்..!!

நீங்கள் அமீரகத்தில் இருந்து வெளியே பிற நாடுகளுக்கு விமானத்தில் பயணிக்கும் போது ஒவ்வொரு முறையும் டாக்ஸியில் விமான நிலையத்திற்குச் செல்வது சற்று சிரமம் ஆனதாக இருக்கலாம். மேலும், சொந்த வாகனங்களில் விமான நிலையத்திற்கு வருவது பலருக்கும் வசதியானதாக இருக்கும்.

அப்படிப்பட்ட வசதியை பயணிகளுக்கு வழங்குவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்போது நீண்ட கால பார்க்கிங் விருப்பங்களை வழங்குகின்றன. இதன் மூலம், உங்களது வாகனங்களை நீண்ட காலத்திற்கு விமான நிலையத்தில் பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தில் இருக்கக்கூடிய விமான நிலையங்களில் பல்வேறு பார்க்கிங் பகுதிகளுக்கு வசூலிக்கப்படும் கட்டண விவரங்களைப் பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம். மேலும், எந்த விமான நிலையம் இலவச பார்க்கிங் வசதிகளை வழங்குகிறது என்பதையும் பார்க்கலாம்.

DXB பார்க்கிங் கட்டணம்:

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மூன்று வெவ்வேறு டெர்மினல்களும் வெவ்வேறு பார்க்கிங் கட்டணங்களைக் கொண்டுள்ளன.

DXB T1 – டெர்மினல் 1

டெர்மினலுக்கு 2-3 நிமிட நடைப்பயணத்தில் செல்லக்கூடிய தொலைவில் அமைந்துள்ள கார் பார்க்கிங் A (பிரீமியம் ஏரியா) இல் நாள் முழுவதும் அல்லது 24 மணி நேர பார்க்கிங்கிற்கு 125 திர்ஹம் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும் 100 திர்ஹம் வசூல் செய்யப்படும்.

அதுபோல, டெர்மினலுக்கு 7-8 நிமிட நடைப்பயணத்தில் செல்லக்கூடிய தொலைவில் உள்ள எகனாமிக் பகுதியான கார் பார்க்கிங் B இல் 24 மணிநேரத்திற்கு 85 திர்ஹமும் ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும் 75 திர்ஹமும் செலுத்தி உங்கள் காரை பார்க்கிங் செய்து கொள்ளலாம்.

குறிப்பாக, கடந்த ஜூன் 8 ஆம் தேதி முதல், பொதுப் போக்குவரத்து மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே டெர்மினல் 1 இல் உள்ள வருகைகள் முன்கோட்டிற்கு (Arrivals forecourt) அணுகல் வழங்கப்படுகிறது. அத்துடன் பயணிகளை ஏற்றிச்செல்ல வரும் கார்கள் இரண்டு கார் பார்க்கிங் அல்லது வாலட் சேவையில் (valet service) ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்த முடியும்.

கார் பார்க்கிங் A இல் வசூலிக்கப்படும் கட்டணங்கள்:

  • 5 நிமிடம் – 5 திர்ஹம்
  • 15 நிமிடம் – 15 திர்ஹம்
  • 30 நிமிடம்- 30 திர்ஹம்
  • 2 மணி நேரம் – 40 திர்ஹம்
  • 3 மணி நேரம் – 55 திர்ஹம்
  • 4 மணி நேரம் – 65 திர்ஹம்
  • 24 மணி நேரம் – 125 திர்ஹம்
  • கூடுதலான ஒவ்வொரு நாள் – 100  திர்ஹம்

கார் பார்க்கிங் B இல் வசூலிக்கப்படும் கட்டணங்கள்:

  • 1 மணி நேரம் – 25 திர்ஹம்
  • 2 மணி நேரம் – 30 திர்ஹம்
  • 3 மணி நேரம் – 35 திர்ஹம்
  • 4 மணி நேரம் – 45 திர்ஹம்
  • 24 மணி நேரம் – 85 திர்ஹம்
  • கூடுதலான ஒவ்வொரு நாள் – 75 திர்ஹம்

டெர்மினல் – 2: கார் பார்க்கிங் A மற்றும் B இல் வசூலிக்கப்படும் கட்டணங்கள்:

  • 1 மணி நேரம் – கார் பார்க்கிங் Aஇல் 30 திர்ஹம், Bஇல் 15 திர்ஹம்
  • 2 மணி நேரம் – கார் பார்க்கிங் Aஇல் 40 திர்ஹம், Bஇல் 20 திர்ஹம்
  • 3 மணி நேரம் – கார் பார்க்கிங் Aஇல் 55 திர்ஹம், Bஇல் 25 திர்ஹம்
  • 4 மணி நேரம் – கார் பார்க்கிங் Aஇல் 65 திர்ஹம், Bஇல் 30 திர்ஹம்
  • 24 மணி நேரம் – கார் பார்க்கிங் Aஇல் 125 திர்ஹம், Bஇல் 70 திர்ஹம்
  • கூடுதலான ஒவ்வொரு நாளுக்கும் – கார் பார்க்கிங் Aஇல் 100 திர்ஹம், Bஇல் 50 திர்ஹம்

டெர்மினல் – 3: எல்லா நிலைகளிலும் வசூலிக்கப்படும் கட்டணங்கள்:

  • 5 நிமிடம் – 5 திர்ஹம்
  • 15 நிமிடம் – 15 திர்ஹம்
  • 30 நிமிடம்- 30 திர்ஹம்
  • 2 மணி நேரம் – 40 திர்ஹம்
  • 3 மணி நேரம் – 55 திர்ஹம்
  • 4 மணி நேரம் – 65 திர்ஹம்
  • 24 மணி நேரம் – 125 திர்ஹம்
  • கூடுதலான ஒவ்வொரு நாள் – 100 திர்ஹம்

இலவச பார்க்கிங்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மிகப்பெரிய விமான நிலையமான அல் மக்தூம் விமான நிலையத்தில் (துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் – DWC) வருகை மற்றும் புறப்படும் பகுதி ஆகிய இரண்டிலும் இலவச பார்க்கிங் சலுகை வழங்கப்படுகிறது.

அபுதாபி பார்க்கிங் கட்டணம்:

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 3 இல் நாள் முழுவதும் பார்க்கிங்கிற்கான கட்டணம் 240 திர்ஹம் ஆகும். டெர்மினல் 2 மற்றும் கார்டன் பார்க்கிங்கில் 24 மணி நேரமும் 120 திர்ஹம் ஆகும். மேலும், இவற்றுடன் value-added taxஐச் சேர்க்கவும்.

மூன்று டெர்மினல்களிலும் வசூலிக்கப்படும் கட்டணங்கள்:

  • 30 நிமிடங்கள் – T1, T3இல் 10 திர்ஹம் மற்றும் T2, கார்டன் பார்க்கிங்கில் 5 திர்ஹம்
  • ஒரு மணி நேரம் – T1, T3இல் 20 திர்ஹம் மற்றும் T2, கார்டன் பார்க்கிங்கில் 10 திர்ஹம்
  • ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கும் – T1, T3இல் 10 திர்ஹம் மற்றும் T2, கார்டன் பார்க்கிங்கில் 5 திர்ஹம்
  • 24 மணி நேரம்  – T1, T3இல் 240  திர்ஹம் மற்றும் T2, கார்டன் பார்க்கிங்கில் 120 திர்ஹம்

ஷார்ஜா பார்க்கிங் கட்டணம் – குறுகிய கால பார்க்கிங் (வருகை மற்றும் புறப்பாடு) கட்டணங்கள்:

  • ஒரு மணி நேரம் – 16 திர்ஹம்
  • 2 மணி நேரம் – 27 திர்ஹம்
  • 3 மணி நேரம் – 37 திர்ஹம்
  • 4 மணி நேரம் – 48 திர்ஹம்
  • ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கும் – 11 திர்ஹம்

நீண்ட கால பார்க்கிங் கட்டணம்: 

  • 24 மணிநேரம் – 95 திர்ஹம்
  • 2 வது நாள் முதல் – நாளொன்றுக்கு 95 திர்ஹம்
  • 30 நாட்களுக்கு மேல் சென்றால் பார்க்கிங் மற்றும் அபராதம் – 2,000 திர்ஹம்
  • டிக்கெட்டை இழந்தால் – பார்க்கிங் கட்டணத்துடன் அபராதம் சேர்த்து 200 திர்ஹம் செலுத்த வேண்டும்

Related Articles

Back to top button
error: Content is protected !!