ADVERTISEMENT

உலகின் அதிவேக மொபைல் இன்டர்நெட்டைக் கொண்டுள்ள அமீரகம்..! ஜூன் மாதத்திற்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளதாக அறிக்கை….

Published: 21 Jul 2023, 7:21 PM |
Updated: 21 Jul 2023, 7:41 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஜூன் மாதத்தில் உலகின் அதிவேக மொபைல் இன்டர்நெட்டைக் கொண்டுள்ளதாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இணைய அணுகலின் செயல்திறன் அளவீடுகளை பகுப்பாய்வு செய்யும் இணைய சேவையான Ookla வெளியிட்ட ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸின் படி, ஜூன் மாதத்தில் அமீரகமானது உலகளவில் 204.24 Mbps டவுன்லோட் வேகம் மற்றும் 22.72 Mbps அப்லோட் வேகத்துடன் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து வெளியான தரவுகளின் படி, 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான உலகளாவிய தரவரிசையில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ள அதே நேரத்தில், ஏப்ரல் மாதத்தில் அது இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதுபோல, நிலையான பிராட்பேண்ட் வேகத்தைப் (fixed broadband speed) பொறுத்தவரை, ஜூன் மாதத்தில் 239.2 Mbps டவுன்லோட் வேகத்துடன் அமீரகம் உலகளவில் இரண்டாவது இடத்தையும், அரபு நாடுகளில் பிராந்திய அளவில் முதல் இடத்தையும் பிடித்திருக்கிறது. இந்த பட்டியலில் சுமார் 247.29 Mbps வேகத்துடன் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

மேலும், Ookla வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் Etisalat by e& இன் மொபைல் டவுன்லோட் வேகம் 216.65 Mbps ஆகவும், fixed டவுன்லோட் வேகம் 261.98 Mbps ஆகவும் பதிவாகியிருப்பதாகக் காட்டியுள்ளது.

அதுமட்டுமின்றி, Etisalat by e& ஆனது 680.88 Mbps இல் சராசரி 5G டவுன்லோட் வேகத்தையும், 35 ms இல் மிகக் குறைந்த சராசரி மொபைல் மல்டி-சர்வர் தாமதத்தையும் (latency) கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT