அமீரக செய்திகள்

சாலைகளில் திடீரென பாதையின் குறுக்கே சென்றதால் ஏற்பட்ட விபரீதம்.. விபத்தில் நொறுங்கிய கார்களின் வீடியோவை வெளியிட்ட அபுதாபி காவல்துறை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலைகளில் செல்லும்போது, வாகன ஓட்டிகள் பாதைகளில் இருந்து வெளியேறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இருப்பினும், சில வாகன ஓட்டிகள், சரியான பாதையில் செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில், வேகமாக திசையை மாற்றுதல், திடீரென விலகுதல் போன்றவற்றை மேற்கொள்வதால், அது உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கிறது.

இவ்வாறு பல விதிமீறல்களால் பயங்கர விபத்துகளில் சிக்கிய வாகனங்களின் அதிர்ச்சியூட்டும் காட்சிகளை அபுதாபி காவல்துறை பகிர்ந்துள்ளது. வீடியோவின் முதல் கிளிப்பில், முதலில் செடான் வகை கார் ஒன்று வேகமாகச் செல்வதைப் பார்க்கலாம், திடீரென்று மற்றொரு பாதையின் குறுக்கே வெளியேறும் பாதையை நோக்கி வேகமாகச் செல்கிறது.

அதன்பிறகு, சாலையில் தடைசெய்யப்பட்ட கோடுகளை அடைந்தவுடன் அங்கிருந்த கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகிறது. வேகமாக சென்று மோதிய தாக்கத்தின் விளைவாக, செடான் கார் பலமுறை கவிழ்வதையும் இந்த வீடியோ பதிவில் காணமுடிகிறது.

இதேபோன்ற ஒரு தவறை அடுத்த கிளிப்பில் மற்றொரு ஓட்டுநர் செய்வதைக் காணலாம். இந்த ஓட்டுநர் மூன்று பாதைகளை கடக்க முயன்று வேகமாக காரை திருப்பியதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து வெளியேறும் தடையில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் எல்லா நேரங்களிலும் சாலைகளில் திடீர் விலகலைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறித்தியுள்ளது. மேலும் இது வாகன ஓட்டிகளுக்கும், மற்ற வாகனங்களில் பயணிப்பவர்களின் உயிருக்கும் பேராபத்தை விளைவிக்கும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

மேலும், சாலைகளில் திடீரென திசை திருப்புதல் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான போக்குவரத்து குற்றமாகும். மேலும் இது போன்ற விதிமீறலில் ஈடுபடுமவர்களுக்கு 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதுபோல, நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மற்ற வாகனங்களை தவறாக முந்திச் சென்றால், அந்த வாகன ஓட்டிகளுக்கு 600 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படும் என்றும் அபுதாபி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, சாலைகளில் எப்போதும் வேறொரு பாதைக்கு மாறும்போது, சாலையில் வாகனப் போக்குவரத்து தெளிவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், பாதைகளுக்கு இடையில் பொறுப்பற்ற முறையில் குறுக்கே செல்ல வேண்டாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறை வழங்கியுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!